மத்தியப் பிரதேச மாநிலத்தில் முகமது மக்சூட் என்பவர் வயிற்றில் இருந்து 5 கிலோ இரும்பு பொருட்களை வைத்தியர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்துள்ளனர்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள சாத்னா மாவட்டம் சோஹாவாலை சேர்ந்த 32 வயதுடைய முகமது மக்சூர் என்பவர் கடுமையான வயிற்று வலி காரணமாக கடந்த 18ஆம் திகதி வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டார்.

வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்ட மக்சூரிற்கு செய்யப்பட்ட எக்ஸ்ரே பரிசோதனையில் அவரது வயிற்றில் சில பொருட்கள் இருப்பது தெரிந்துள்ளது.

இதையடுத்து 6 வைத்தியர்கள் அடங்கிய குழு அறுவை சிகிச்சை செய்து அந்த பெருட்களை வெளியே எடுக்க முடிவெடுத்துள்ளனர். அறுவை சிகிச்சையில் ஷேவிங் பிளேடுகள், ஊசிகள், செயின்இ நாணயங்கள், கண்ணாடி துண்டுகள் என 5 கிலோ அடங்கிய பொருட்கள் அகற்றப்பட்டுள்ளது.

இச் சம்பவம் குறித்து வைத்தியர்கள்  "முகமது மனநிலை சரியில்லாதவர், அவர் யாருக்கும் தெரியாமல் இரும்பு பொருட்களை விழுங்கியுள்ளார். இங்கு வருவதற்கு முன் இவருக்கு ரேவா மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. தற்போது முகமது நன்றாக உள்ளார்" என தெரிவித்துள்ளனர்.