காங்கேசன்துறை பொலிஸ் கல்லூரியின் தலைமை பொலிஸ் பரிசோதகர் கைது

Published By: Priyatharshan

04 Feb, 2016 | 09:36 AM
image

மட்டக்களப்பு நகரின் தனியார் வங்கி யொன்றில் கொடுக்கல் – வாங்கல் நடவடிக்கை ஒன்றுக்காக சென்றிருந்த ஜனாதி பதியின் இணைப்பு செயலாளரான தாஜுதீன்ரபாய்தீன் என்பவரின் பணப்பையை சூட்சுமமாக திருடிய குற்றச் சாட்டின் கீழ் காங்கேசன்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் சேவையாற்றிய தலைமை பொலிஸ்பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட் டுள்ளார்.

மட்டக்களப்பைச் சேர்ந்த குறித்த உயர்பொலிஸ் அதிகாரி மட்டக்களப்பு பொலிஸாரினால் நேற்று முன் தினம் கைது செய்யப் பட்டதாகவும் அவரை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய நிலை யில் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைத்துள்ளதாகவும் கிழக்குப் பிராந்திய உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து மேலும் அறிய முடிவதாவது,

கடந்த வருடத்தின் டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி மட்டக்களப்பில் உள்ள தனியார்வங்கியில் கொடுக்கல் – வாங்கல் நடவடிக் கைக்காக அம்பாறை, உகன பிரதேசத்தைச் சேர்ந்த தாஜுதீன் எனப்படும் ஜனாதிபதியின் இணைப்புச்செயலாளர் ஒருவர் சென்றுள்ளார். வங்கி நடவடிக்கைகளின் போது அவரது பணப்பை அவரை அறியாமல் கீழே விழுந்துள்ளது. இதன் போது அந்த பணப்பையில் சுமார் ஒரு இலட்சம் ரூப வரை பணம் இருந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந் நிலையில் பணப்பை காணாமல் போயுள்ளது. இது குறித்து குறித்த நபர் சுமார் 3 வாரங்களின் பின்னர்இ கடந்த ஜனவரி 17 ஆம் திகதி மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் தனது பணப்பையை காணவில்லையென முறைப்பாடளித்துள்ளார். முறைப்பாட்டை அடுத்து விசாரணைகளை ஆரம்பித்த மட்டக்களப்பு பொலிஸார் வங்கியின் கண்காணிப்பு கமெரா பதிவுகளை சோதனை செய்தனர். இதன்போது தவறுதலாக விழும் பணப்பையை நபர் ஒருவர் காலால் வங்கிக்கு வெளியே தட்டிவிட்டு பின்னர் எடுத்துச்செல்வது தெரிந்தது. கண்காணிப்பு கமராவில் இருந்த நபர் தொடர்பில் விசாரணை செய்த போது அவர் ஒரு தலைமை பொலிஸ் பரிசோதகர் தர பொலிஸ் அதிகாரி என்பது தெரியவந்தது.

குறித்த அதிகாரி காங்கேசன்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் கடமையாற்றுவதை அறிந்துகொண்ட பொலிஸார் அவரை விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையம் வருமாறு அறிவித்தல் அனுப்பியுள்ளனர். இந்த அறிவித்தலானது ஜனவரி 23 ஆம் திகதி அனுப்பப்பட்டுள்ளது. எனினும் அவர் பொலிஸ் நிலையம் வராததால் பொலிஸார் அவரை நேற்று முன் தினம் கைதுசெய்தனர். இதனையடுத்தே அவர் மட்டக்களப்பு நீதிவான் கணேசராஜா முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53