நியூசிலாந்தைச் சேர்ந்த 49 வயதான நிக் ஜெரிட்சன்  விஞ்ஞானிகளின் கூட்டினைப்பால் அறிவுதிறன் மிக்க செயற்கை அரசியல்வாதியை உருவாக்கி  சாதனை படைத்துள்ளனர்.

இதற்கு ‘சாம்’ என்று பெயரிட்டுள்ளனர். இந்த அரசியல்வாதி மக்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும். கல்வி, குடியுரிமை, வீட்டுவசதி உட்பட துறை சார்ந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் இந்த செயற்கை அரசியல்வாதியை உருவாக்கி இருக்கிறார்கள்.

பேஸ்புக் மெசஞ்சர் மூலம் இந்த செயற்கை அரசியல்வாதியுடன் உரையாடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் தொடர்ந்து பல விஷயங்களை செயற்கை அரசியல்வாதி கற்று வருகிறார் என்கின்றனர்.

உலக நாடுகளில் நடைமுறைகள் சரியில்லாத போது, இந்த ‘சாம்’ அதற்குத் தீர்வாக இருக்கும் என்று ஜெரிட்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் ‘‘அரசியலில் தற்போது பாரபட்சமாக செயல்படும் நிலை உள்ளது.

இது உலகம் முழுவதுமே உள்ளது. இதனால் பருவநிலை மாற்றம், சமத்துவம் போன்ற அடிப்படை மற்றும் பன்முக சிக்கல் நிறைந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியவில்லை’’ என்று நிக் ஜெரிட்சன் கூறுகிறார்.

இந்நிலையில் நியூசிலாந்தில் வரும் 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. அந்தத் தேர்தலில் ‘சாம்’ அரசியல்வாதி போட்டியிட தகுதியுள்ளவராக இருப்பார் என்று ஜெரிட்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

எனினும் சட்டரீதியாக அதற்கு வாய்ப்பில்லை என அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.