அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வரும் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

விஜய் சேதுபதி - கவுதம் கார்த்திக் இணைந்து நடித்து வரும் படம் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்'. ஆறுமுக குமார் இயக்கி வரும் இந்த படத்தில் நாயகியாக நிகாரிகா கொனிதலா அறிமுகமாகிறார். ரமேஷ் திலக், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் டீசர் வருகிற டிசம்பர் 29 ஆம் திகதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படத்தை '7c's என்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட்' தயாரிக்கிறது. 'அம்மே நாராயணா என்டர்டெயின்மெண்ட்' ரிலீஸ் செய்கிறது. 

ஸ்ரீ சரவணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படம் வருகிற ஜனவரி ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது.