இன்றைய திகதியில் இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்களாகயிருந்தாலும் சரி  அல்லது நான்கு சக்கர வாகனத்தில் சாரதியாக இருப்பவர்களும் சரி காதில் ஒலிவாங்கியை மாட்டிக்கொண்டு பேசிக் கொண்டும், பதிலளித்துக் கொண்டும், பாடல்களைக் கேட்டுக் கொண்டும் தான் பயணிக்கிறோம். இதன் காரணமாக காது கேளாமை சிக்கல் ஏற்பட வழிவகுக்கிறோம்.

அதே போல் நாம் இயங்கி வரும் சுற்றுப்புறச் சூழலில் அதிகரித்து வரும் ஒலி மாசால் எம்முடைய ஆரோக்கியத்திற்கு கேடு வரவிருக்கிறது. இந்த ஒலிமாசினை கட்டுப்படுத்தாவிட்டால் இதன் காரணமாகவே எமக்கு மனஅழுத்தம், பதற்றம், இரத்த அழுத்தம், இதய துடிப்பு திடிரென்று அதிகரித்தல் போன்றறை ஏற்படுகிறது. இந்த பாதிப்புகள் ஏற்பட்டவுடன் இதன் துணை விளைவாக தூக்கமின்மை, தலைவலி, சோர்வு, எரிச்சல், கவனக்குறைவு போன்றவைகளும் உருவாகும்.

சப்தத்தை உண்டாக்கும் வீதிகள், போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதிகள், மைதானம் ஆகிய பகுதிகளில் வழக்கத்தை விட தற்போது ஒலி மாசு அதிகரித்திருப்பதாகவும், பாடசாலையில் உள்ள வகுப்பறைகள் மற்றும் வைத்தியசாலைகளிலும் ஒலி மாசு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் அளவை விட அதிகமாகியிருப்பதாகவும் ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டிருக்கின்றன.

மாணவர்களின் பேச்சு பயிற்சிக்காக உலக சுகாதார நிறுவனம் அதிகபட்சமாக 15 டெசிபல் அளவு வரையிலான ஒலியளவையே நிர்ணயித்திருக்கிறது. ஆனால் இன்று பாடசாலைகளில் 15 முதல் 35 டெசிபல் அளவுகளில் ஒலி உருவாவதாக தெரிவிக்கிறார்கள். 

இதற்காக பாடசாலை மற்றும் வைத்தியசாலைகளில் விதிக்கப்பட்டுள்ள ஒலியளவை அனைவரும் பின்பற்றவேண்டும். அத்துடன் ஒலிமாசினை குறைக்க அனைவரும் மரம் வளர்ப்பில் ஈடுபடலாம் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

டொக்டர் அகர்வால்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்