மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் உள்ளூராட்சி சபைகளை கைபற்றும் நிலை

Published By: Robert

27 Nov, 2017 | 02:44 PM
image

நடைபெற இருக்கும் தொகுதிவாரியான உள்ளூராட்சி தேர்தலுக்கு நுவரெலியா மாவட்டத்தில் 04 பிரதேச சபைகள் அதிகரிக்கபட்டுள்ளன. ஏற்கனவே இரண்டு காணப்படும் நிலையில் தற்போது மொத்தமாக 06 பிரதேச சபைகளில் பெருந்தோட்டதுறையை சேர்ந்த தொழிலாளர்கள் போட்டியிடவும் அவர்கள் ஆட்சி அமைக்கவும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதற்கு காரணம் தழிழ் முற்போக்கு கூட்டணியின் ஒற்றுமையும் நல்லாட்சியுமே என்று கூறுகின்றார் கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வே.இராதாகிருஸ்ணன்.

அக்கரபத்தன பிரதேசத்தில் நடைபெற்ற மலையக மக்கள் முன்னணியின் தோட்;ட தொழிலாளர்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு அங்கு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். இந் நிகழ்வில் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.இராஜாராம், மலையக மக்கள் முன்னணியின் நிதி செயலாளர் எஸ். விஸ்வநாதன் முன்னணியின் உதவிச் செயலாளர் எஸ்.அஜித்குமார் உட்பட மாவட்ட தலைவர்கள், நிர்வாக இயக்குனர்கள், காரியாலய உத்தியோகஸ்தர்கள் உட்பட தோட்ட தொழிலாளர்கள் கலந்துக் கொண்டார்கள். இதன்போது  தோட்ட தொழிலாளர்களுக்கு நடைபெற இருக்கும் புதிய தேர்தல் முறைமை தொடர்பில் விளக்கமும் அளிக்கபட்டது.

தொடர்ந்து இங்கு கருத்து தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர்,

தற்போது முன் வைக்கபட்டுள்ள புதிய தேர்தல் முறையில் பல குறைபாடுகள் காணப்பட்டபோதும் நுவரெலியா மாவட்டத்தை பொருத்த வரையில் 06 பிரதேச சபைகள் உருவாக்கபட்டமை வரவேற்கத்தக்க ஒன்றாகும். இவ்வாறு மிகவும் கஷ்ட்டத்தின் மத்தியில் உருவாக்கபட்ட இந்த பிரதேச சபைகளை தொழிலாளர்களே ஆளும் நிலை உருவாக வேண்டும். இம் முறை பெண்களுக்கு தேர்தலில் போட்டியிட அதிக வாய்ப்புகள் வழங்கபட்டுள்ளன. அதேபோல் இளைஞர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கபட்டுள்ளன. இதை பயன்படுத்தி இவர்களும் முன் வரவேண்டும். தோட்டத்தில் தொழில் புரிபவர்களும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உண்டு. அவர்களும் போட்டியிடலாம். மலையகத்தின் பிரதேச சபைகளை தோட்ட தொழிலாளர்கள் ஆள வேண்டும். அவ்வாறான நிலையிலேயே மக்களுக்கான சேவைகளை முறையாக முன் கொண்டு செல்ல முடியும்.

அதேபோல் பிள்ளைகளின் கல்வியில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். நாம் எல்லா விடயங்களிலும் முன் செல்ல வேண்டுமானால் கல்வி மிக முக்கியம். நான் உங்களால் தெரிவு செய்யபட்ட கல்வி இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் உங்கள் பிள்ளைகளின் கல்வி அபிவிருத்திக்கு பல சேவைகளை செய்து வருகின்றேன். கடந்த வருட பாதீட்டில்  250 மில்லியன் ரூபா மலையக கல்விக்காக பெறபட்டது. இம்முறை அது 450 மில்லியனாக மாறியுள்ளது. அது மட்டும் அல்லாது அவ்வப்போது கல்வி அமைச்சில் பிரச்சனைகளை போட்டுக் கொண்டாவது தமிழ் கல்விக்கான உரிமைகளை பெற்று வருகின்றேன். 

தற்போது இலங்கையில் உள்ள 45 இலட்ச மாணவர்களுக்கும் இலவச காப்புறுதி திட்டம் வழங்கபட்டு வருகின்றது. இதன்நோக்கம் மாணவ சமுதாயத்தை பாதுகாக்கவும் பெற்றோர்களின் சுமையை குறைக்கவும் ஆகும். ஆகவே பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளின் காப்புறுதிகளை பாடசாலை அதிபருடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளவும். இந்த காப்புறுதி மூலம் பல்வேறு நன்மைகள் கிடைகின்றன என கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04