கிழக்கு சிரியாவில் உள்ள அல்-ஷஃபா கிராமத்தில் ரஷ்யா நடத்திய விமானப்படை தாக்குதலில் பொதுமக்கள் 53 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு கண்காணிப்பு குழு தகவல் வெளியிட்டுள்ளது.

நேற்று காலை நடைபெற்ற இத்தாக்குதலில் பலியானவர்களில் 21 குழந்தைகள் உள்ளடங்குவதாக  சிரிய மனித உரிமைகளுக்கான ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

"சிதைந்த கட்டிடங்களின் எஞ்சிய பாகங்களை அகற்றிய பின்னர் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது" என கண்காணிப்பு குழுவின் தலைவர் ராமி அப்துல் ரஹ்மான் கூறினார்.

ஆறு நீண்ட தூர குண்டு வீசும் விமானங்கள் மூலம் இப்பகுதியில் தாக்குதல் நிகழ்த்தியதாகவும், மேலும் தீவிரவாதிகள் மற்றும் அவர்களின் இருப்புகள் மீதுதான் தாக்கியதாக ரஷ்யா உறுதிப்படுத்தியுள்ளது.