கிதுல்கல பிரதேசத்தில் நடைபெற்ற திருமண வைபவத்தில் உணவு விஷமானதால், 50ற்கும் மேற்பட்டோர் கிதுல்கல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காய்ச்சல் வாந்தி மற்றும் வயிற்றுவலி ஏற்பட்ட நிலையில், 25.11.2017 அன்று காலை தொடக்கம் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கிதுல்கல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் கரவனெல்ல வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார். மேலும் 18 பேர்  கிதுல்கல வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பெண்கள், ஆண்கள் மற்றும் சிறுவர்கள், குழந்தைகள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மற்றைய நபர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.