வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் ஐந்து உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான, தேர்தல் அறி­விப்பே இன்று வெளி­யி­டப்­படும் என்று தேர்தல் ஆணையக வட்­டா­ரங்­கள் தெரிவித்துள்ளன.

உள்­ளூ­ராட்சி சபைகள் தொடர்­பான வர்த்­த­மானி அறி­விப்­புக்கு மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் விதித்­துள்ள இடைக்­காலத் தடை­யினால், 203 உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்கு ஏற்­க­னவே திட்­ட­மிட்­ட­படி உட­ன­டி­யாக தேர்தல் நடத்த முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது.

எஞ்­சி­யுள்ள, 133 சபை­க­ளிலும், 40 உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான வர்த்­த­மானி அறி­விப்பும் திருத்­தப்­பட வேண்­டி­யுள்­ளது. ஏனைய 93 உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­குமே இன்று வேட்­பு­ம­னுக்­களை கோரும் அறி­விப்பு வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளது. இன்று வேட்­பு­ம­னுக்­களைக் கோரும் அறி­விப்பு வெளி­யி­டப்­ப­ட­வுள்ள 93 உள்­ளூ­ராட்சி சபை­களில் வடக்கு, கிழக்கில் 5 உள்­ளூ­ராட்சி சபைகள் மாத்­திரம் இடம்­பெற்­றுள்­ளன.

வடக்கில் சாவ­கச்­சேரி நகர சபைக்கு மாத்­திரம், இன்று வேட்­பு­மனுக் கோரும் அறி­விப்பு வெளி­யி­டப்­படும். கிழக்கு மாகா­ணத்தில், மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் உள்ள ஏறாவூர் நக­ர­சபை, ஏறா­வூர்ப்­பற்று பிர­தேச சபை, கோர­ளைப்­பற்று பிர­தேச சபை, மண்­முனை பிர­தேச சபை ஆகி­ய­வற்­றுக்கு மாத்­திரம் தேர்­தல்­களை நடத்தக் கூடிய நிலை உள்­ளது.

அதே­வேளை, 40 உள்­ளூ­ராட்சி சபைகள் தொடர்­பான, வர்த்­த­மா­னியில் திருத்தம் செய்யும் அறி­வித்தல் வெளி­யி­டப்­பட்­டாலும் கூட, வடக்கில்  இரண்டு சபை­க­ளுக்கு மாத்­திரம் தேர்­தல் நடத்தப்பட முடியும். யாழ். மாவட்டத்தில் உள்ள வலிகாமம் வடக்கு, வலிகாமம் தெற்கு பிரதேச சபைகளுக்கான தேர்தல்களையே நடத்த முடியும் என்றும் அறிவிக்கப்படவுள்ளது.