கனடாவை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய கண்களுக்குள் பச்சைக் குத்திக்கொண்டதால் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்.

கேட் காலிங்கர் என்ற அந்த பெண் தற்போது தன்னுடைய பார்வையை இழந்துள்ளார். குறித்த  பெண் தன்னுடைய காதலன் எரிக் பிரவுன் தனது கண்களில் பச்சைகுத்திக் கொண்டதால் அவரும் அப்படி பச்சைக் குத்திக் கொண்டதாக கூறப்படுகிறது.

கண்களில் பச்சை குத்தும் பழக்கம்புதிய டிரெண்ட் தற்போது உலகம் முழுக்க வைரல் ஆகி வருகிறது. அதிலும் கண்களில் கலர் கலராக பச்சை குத்துவதுதான் டிரெண்ட்.

இது மிகவும் கடினமான வேலை, கண்கள் வலிக்காமல் இருக்க ஊசி போட்ட பின் எந்த நிறம்வேண்டுமோ அந்த நிறத்தில் மிகவும் சூடான கலவையை கண்களில் மெதுவாக பாய்ச்சுவார்கள்.

என்னதான் வலிக்காமல் இருக்க ஊசி போட்டாலும் அந்த நேரத்தில் வலி மிகவும் அதிகமாக இருக்கும். அதுமட்டும்  இல்லாமல் இதைச் செய்வதற்கு லட்சக்கணக்கில் செலவு ஆகும்.

மேலும் கண்களை சில மாதத்திற்கு மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

கனடாவை சேர்ந்த கேட் காலிங்கர் என்ற பெண் தன்னுடைய காதலன் எரிக்பிரவுன் விருப்பத்தின் பேரில் கண்களில் பச்சைக் குத்த முடிவு செய்து இருக்கிறார்.

அவரது காதலன் தனது கண்களில் ‘பிங்க்’ நிறத்தில் பச்சை குத்தி இருக்கிறார். ஆகவே இந்த பெண் தனது கண்களில் ஊதா நிறத்தில் பச்சை குத்த முடிவு செய்து இருக்கிறார்.

மேலும் அவர் காதலனே பச்சை குத்தி விடுவதாகவும் கூறி உள்ளார். இந் நிலையில் பச்சை குத்திய பின் அந்த பெண்ணுக்கு கண்களில் சில நாளில் பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறது.

ஒரு கண் மட்டும் ஊதா நிறத்தில் வீக்கம் அடைந்து இருக்கிறது. மேலும் தினமும் அவருக்கு அதே நிறத்தில் கண்ணீரும் வந்துள்ளது.

அவரது காதலன் பச்சை குத்தும் போது முக்கியமான பாதுகாப்பு திரவம் ஒன்றை கலக்க மறந்துவிட்டதாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது  வைத்தியர்கள் குறித்த  பெண்ணின் கண்களை எடுக்க வேண்டும் என்றும்,  இல்லையென்றால் மற்ற கண்ணும் இதன் காரணமாக பாதிப்படைய வாய்ப்பு இருக்கிறது என்று கூறியுள்ளனர்.

இந்த பிரச்சனை காரணமாக காதலர்கள் இருவருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டு பிரிந்து இருக்கிறார்கள். மேலும் கேட் தன் முன்னாள் காதலன் எரிக் மீது வழக்கு தொடுக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.