(ஆர்.யசி)

வடக்கில் மாவீரர் தினத்தையும், பிரபாகரனின் பிறந்த தினத்தையும் கொண்டாடியதாக தகவல்கள் பதிவாகியுள்ளது. எனினும் எம்மால் எதையும் செய்ய முடியாது என இராணுவ ஊடகப்பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொசான் செனவிரத்ன தெரிவித்தார். விஷேட காரணிகளுக்காக வடக்கில் இராணுவத்தை குவிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். 

வடக்கில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பது மற்றும் இன்றைய தினம் வடக்கில் வல்வெட்டித்துறை பகுதியல் புலிக்கொடிக்கு சமாந்தரமாக மாற்றுக் கொடியொன்றை ஏற்றியமை, பிரபாகரனின் பிறந்த தினத்தை கொண்டாடியமை குறித்தும் இந்த சம்பவங்களின் பின்னர் வடக்கில் இராணுவத்தை குவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில், இது குறித்து இராணுவ ஊடகப்பேச்சாளரிடம் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.