லிபிய படகு விபத்தில் குடியேற்றக்காரர்கள் 31 பேர் பலி

Published By: Devika

26 Nov, 2017 | 10:52 AM
image

படகு கவிழ்ந்ததில் லிபிய குடியேற்றக்காரர்கள் 31 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் குழந்தைகளும் அடங்குவர்.

அமைதியான கடல், பாதுகாப்பான பருவ நிலை காரணமாக லிபியாவிலிருந்து குடியேற்றக்காரர்கள் மத்திய தரைக் கடல் வழியாக ஐரோப்பாவுக்குப் புலம் பெயரும் முயற்சிகளை ஆரம்பித்துள்ளனர்.

அதன்படி, நேற்று (25) இரண்டு படகுகளில் சுமார் இருநூறு குடியேற்றக்காரர்கள் மத்தியதரைக் கடலில் பயணித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு படகு மூழ்க ஆரம்பித்தது. இதையடுத்து ஆபத்து சமிக்ஞைகள் விடுக்கப்பட்டன.

இதைக் கேட்ட திரிபொலி கடற்படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். எனினும், அதற்கிடையில் ஒரு படகு முழுமையாகக் கவிழ்ந்துவிட்டது.

அறுபது பேரைக் கடலில் இருந்து மீட்டபோதும் சுமார் 31 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்ததாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்டவர்கள் திரிபொலி துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52