கனடாவின் ஒன்டாரியோவை சேர்ந்த பெண்மணி ஒருவர் பொது இடத்தில் வைத்து தனது குழந்தைக்கு  பாலூட்டிய புகைப்படத்தை முகநூலில் வெளியிட்டுள்ளார்.

Brittni Medina என்ற பெண்மணி தனது கணவர் மற்றும் 10 மாத குழந்தையுடன் கலிபோர்னியாவில் உள்ள டிஸ்னிலேண்டுக்கு சென்றுள்ளார்.

அங்கு வரிசையில் நின்றிருந்தபோது இவரது 10 மாத குழந்தை பசியால் அழுதுள்ளது. உடனே பொது இடம் என்றும் பாராமல் தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளார்.

இதனை இவருக்கு பின்னால் நின்றிருந்த இரண்டு பெண்கள் கேலி செய்துள்ளனர். இதனை கவனித்த Brittni Medina  தனது கணவரை அழைத்து தாய்ப்பால் கொடுப்பதை புகைப்படம் எடுக்க கூறியுள்ளார்.

அதன்படியே கணவர் எடுத்த புகைப்படத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு,

"பொது இடத்தில் வைத்து ஒரு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை சில பெண்கள் அவமானமாக கருதுகிறார்கள்.அதனால் இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளேன்.

இந்த புகைப்படத்தால் மற்றவர்களின் கவனத்தை திசைதிருப்பவில்லை. பெண்கள் எப்போதும் தங்கள் உடலை அவமானமாக கருதக்கூடாது" என பதிவிட்டுள்ளார்.

இவரின் இந்த பதிவுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் நேர்மறையாக கருத்துக்கள் வந்துள்ளன மேலும் 800 முறை ஷேர் செய்யப்ட்டுள்ளது.