வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணிகளுடன் சென்ற தனியார் போக்குவரத்து பஸ்  ஒன்று தனது வேக கட்டுப்பாட்டை இழந்து உணவகத்தின் முன்பகுதியுடன் மோதியதில் அதில் பயணித்த சிலர் சிறு காயங்களுக்கு உள்ளாகியதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ் விபத்து இன்று அதிகாலை 12.40 மணியளவில் புத்தளம் தில்லையடி லாஸா உணவகத்துக்கு முன்பாக இவ்  இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவிலிருந்து கொழும்பு பயணிகளுடன் நோக்கி புறப்பட்ட தனியார் பஸ் முன்னாள் சென்ற ஒரு பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்டபோது எதிர்பாராமல் முன்னே கெப் ரக வாகனம் வந்தமையால் குறித்த பஸ்ஸை வேக கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதியில் இருந்த உணவகத்தின் முன்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதி சென்று பின் உணவக கட்டிடத்துடன் மோதி குடைசாய்ந்துள்ளது.

விபத்தின் போது குறித்த பஸ்ஸினுள்  13 பிரயாணிகளே இருந்ததாகவும் இவர்களில் சிலர் சிறுகாயங்களுக்கு உள்ளாகியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ் சம்பவம் தொடர்பாக புத்தளம் பொலிஸார் விசாரைனகளை மேற்கொண்டு வருகின்றனர்.