கொட்டாவை, பன்னிப்பிட்டிய, தெபானம மற்றும் ருக்மலே ஆகிய பிரதேசங்களில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கொட்டாவை நீர் விநியோக குழாயில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர திருத்தவேலைகள் காரணமாகவே குறித்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

குறித்த நீர்வெட்டானது, நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் மறுநாள் திங்கட்கிழமை அதிகாலை 2 மணிவரையிலான 9 மணி நேரத்திற்கு அமுல்ப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.