தெற்கிற்கு அதிவேகம், எமக்கு ஆமை வேகமா ???

Published By: Digital Desk 7

25 Nov, 2017 | 11:47 AM
image

அம்பகமுவ பிரதேச செயலாளர் பகுதிக்குட்பட்ட போட்றி, எலிபடை, அயரபி தோட்ட மக்கள்  இன்று காலை முதல் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

நோர்வூட் அயரபி சந்தியிலிருந்து எலிபடை தோட்டப்பகுதிக்கு செல்லும் சுமார் 5 கிலோ மீற்றர் பிரதான வீதி பல வருடகாலமாக பாவனைக்குதவாமல் குன்றும் குழியுமாக காணப்படுவதால் இப்பிரதான வீதியின் ஊடாக பயணிக்கும் இத்தோட்ட பிரிவை சேர்ந்த 1000 குடும்பங்களைச் சார்ந்த மக்கள் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளதை வெளிக்கொணர்ந்து இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

500ற்கும் மேற்பட்டவர்கள் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை ஹட்டன், பொகவந்தலாவ பிரதான வீதியில் நோர்வூட் அயரபி சந்தியில் முன்னெடுத்தனர்.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் "நிரந்தர வீதியே எமது கோரிக்கை", "தெற்கிற்கு அதிவேகம், எமக்கு ஆமை வேகம்", போன்ற கோசங்களை எழுப்பியதுடன் வாசகங்கள் தாங்கிய பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.

பல வருடகாலமாக இந்த வீதியை சீர்திருத்தி தருமாறு இப்பகுதியை சேர்ந்த அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வந்தும் ஒரு தீர்வினை பெற்றுத்தராத நிலையில் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

இப் பிரதேசங்களில் தொழில் புரிபவர்களும் பாரிய அசௌகரியங்களுக்களாகி வருகின்றமையை ஆர்ப்பாட்டத்தின் போது மக்கள் சுட்டிக்காட்டினர்.

இந்த பிரதான வீதி பாவனைக்குதவாத நிலையில் காணப்படுவதனால் தத்தமது வீடுகளுக்கு பிரதான நகர் பகுதியிலிருந்து பொருட்களை வாகனத்தில் கொண்டு வருவதற்கு சிரமமாக உள்ளதாகவும் ஆர்ப்பாட்டகாரர்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

 

எனவே தோட்ட நிர்வாகமும் இது தொடர்பில் கவனத்திற் கொள்ளாத பட்சத்தில் நம்பி வாக்களித்த அரசியல்வாதிகள் இத்தோட்டத்தின் நலனில் அக்கறை கொண்டு காலம் தாழ்த்தப்படாத நிலையில் குறித்த வீதியை செப்பனிட்டு தரும்படி ஆர்ப்பாட்டகாரர்கள் கோரிக்கையை முன்வைத்தமை குறிப்பிடதக்கது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47