இந்­தியா நாக்­பூரில் நடை­பெற்­று­வரும் இரண்­டா­வது டெஸ்ட் போட்­டியில் இலங்கை அணி 205 ஓட்­டங்­க­ளுக்கு ஆட்­ட­மி­ழந்­தது. பதி­லுக்கு ஆடும் இந்­தியா நேற்­றைய ஆட்டநேர முடிவில் 11 ஓட்­டங்­க­ளுக்கு ஒரு விக்­கெட்டை இழந்த நிலையில் இன்றை 2 ஆம் நாள் போட்டியில் ஒரு விக்கெட்டை இழந்து 43 ஓட்டங்களைப்பெற்று தொடர்ந்து ஆடி வரு­கி­றது. 

இலங்கை – இந்­திய அணி­க­ளுக்­கி­டை­யி­லான 2ஆ-வது டெஸ்ட் கிரிக்கெட் நாக்­பூரில் நேற்­று­தொ­டங்­கி­யது. 

இந்தப் போட்­டியில் நாணயச் சுழற்­சியில் வெற்­றி­பெற்ற இலங்கை அணித் தலைவர் சந்­திமால் துடுப்­பெ­டுத்­தாடத் தீர்­மா­னித்தார். 

அதன்­படி இலங்கை அணியின் சதீர சம­ர­விக்­ரம, கரு­ணா­ரத்ன ஆகியோர் தொடக்க வீரர்­க­ளாக கள­மி­றங்­கி­னார்கள். சதீர 13 ஓட்­டங்கள் எடுத்த நிலையில் ஆட்­ட­மி­ழந்தார்.

அடுத்து திரி­மான்ன கள­மி­றங்கி, கரு­ணா­ரத்­ன­வுடன் இணைந்து மந்­த­மான ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்­தினார். 

இலங்கை 44 ஓட்­டங்கள் எடுத்­தி­ருக்­கும்­போது இந்த ஜோடி பிரிந்­தது. 58 பந்துகளில் 9 ஓட்­டங்கள் எடுத்த நிலையில் திரி­மான்ன ஆட்­ட­மி­ழந்தார். 

3ஆ-வது விக்­கெட்­டுக்கு கரு­ணா­ரத்­ன­வுடன், மெத்­தியூஸ்  ஜோடி சேர்ந்தார். 

ஆனால் அவரும் 10 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழந்து ஏமாற்­றினார். 4ஆ-வது விக்­கெட்­டுக்கு கரு­ண­ர­த­்ன­வுடன் சந்­திமால் ஜோடி சேர்ந்தார். 

இந்த ஜோடி 4ஆ-வது விக்­கெட்­டுக்கு 62 ஓட்­டங்­களை சேர்த்­தது. கரு­ணா­ரத்ன 51 ஓட்­டங்கள் எடுத்த நிலையில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அதனைத் தொடர்ந்து சந்­தி­மா­லுடன் டிக்­வெல்ல ஜோடி சேர்ந்தார். 

டிக்­வெல்­லவும் 24 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழக்க,  மறு­மு­னையில் விளை­யா­டிய சந்­திமால் 57 ஓட்­டங்கள் எடுத்த நிலையில் வெளி­யே­றினார். 

அதன்பின் வந்த வீரர்கள் அடுத்­த­டுத்து விக்­கெட்­டுக்­களை இழக்க இலங்கை அணி 79.1 ஓவர்­களில் 205 ஓட்­டங்­க­ளுக்கு சகல விக்­கெட்­டுக்­க­ளை­யும் இழந்­தது. 

இந்­திய அணி சார்பில் அஷ்வின் 4 விக்­கெட்­டுக்­க­ளையும், இஷாந்த் சர்மா மற்றும் ஜடேஜா தலா 3 விக்­கெட்­டுக்­க­ளையும் வீழ்த்­தி­னார்கள்.

பின்னர் இந்­தியா முதல் இன்­னிங்ஸை தொடங்­கி­யது. ராகு­ல், முர­ளி­ விஜய் ஆகியோர் தொடக்க வீரர்­க­ளாக கள­மி­றங்­கினர். 

இதில் வந்த வேகத்­தி­லேயே 7 ஓட்­டங்­க­ளுடன் கமகே பந்­து­வீச்சில் போல்­டாகி வெளி­யேற, புஜரா களமிறங்கினார்.

இந்த ஜோடி நிதானமாக ஆடிவர நேற்றைய ஆட்ட நேரம் முடிவுக்கு வந்தது. அப்போது இந்தியா 11 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்தது. களத்தில் புஜாரா 2 ஓட்டங்களுடனும் முரளி விஜய் 7 ஓட்டங்களுடனும் உள்ளனர். இன்று போட்டியின் இரண்டாம் நாளாகும்.

இந்நிலையில் இன்றைய 2 ஆவது நாள் போட்டி இடம்பெற்று வருகின்ற நிலையில் இந்திய அணி ஒரு விக்கெட்டை இழந்து 43 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.