இந்து சமுத்­திரம் தொடர்­பாக இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்­குமி­ டையில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வதற்கு உத்­தே­சிக்­கப்­பட்­டுள்ள பொரு­ளா­ தார மற்றும் தொழில்நுட்ப உடன்­ப­டிக்கை தொடர்­பாக இந்­தியத் தரப்­புடன் ஆழ­மான பேச்­சு­வார்த்­ தையில் ஈடு­பட்­ட­தா­கவும் அதற்­கான செயற்­பா­டு­களை துரி­தப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தா­கவும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாத­மா­கும்­போது இரண்டு நாடு­களும் இணக்­கப்­பாட்­டிற்கு வந்த வேலைத்­திட்­டங்­களின் முன்­னேற்­றங்கள் தொடர்­பா­கவும் இதன்­போது விரி­வாக கலந்­து­ரை­யா­டப்­பட்­ட­தா­கவும் அவை மீளாய்வு செய்­யப்­பட்­ட­தா­கவும் பிர­தமர் குறிப்­பிட்­டுள்ளார். 

உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யம்­ ஒன்றை மேற்­கொண்டு கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இந்­தி­யா­வுக்கு சென்­றி­ருந்த பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க நேற்று நாடு திரும்­பு­வ­தற்கு முன்­பாக புது­டில்­லியில் ஊட­க­வி­ய­லாளர்­க­ளுக்கு கருத்து வெளியி­டு­கை­யி­லேயே இந்த விட­யங்­களை குறிப்­பிட்­டி­ருக்­கிறார். 

 பிர­தமர்  அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில், 

இந்து சமுத்­திரம் தொடர்­பாக இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்­கு­மி­டையில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள உத்­தேச புதிய பொரு­ளா­தார மற்றும் தொழில்­நுட்ப உடன்­ப­டிக்கை குறித்து இந்­தியத் தலை­வர்­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தினேன். 

இரண்டு நாடு­க­ளுக்­கு­மி­டையில் பொரு­ளா­தார தொடர்­பு­களை அடிப்­படை விட­யங்­களை முன்­நி­றுத்தி இந்த பொரு­ளா­தார மற்றும் தொழில்நுட்ப உடன்­ப­டிக்­கையை நிறு­வு­வ­தற்கு தீர்­மா­னித்­துள்ளோம். 

இந்­திய விஜ­யத்­தின்­போது இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி இந்­திய ஜனா­தி­பதி வெளிவி­வ­கார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் இந்­திய காங்­கிரஸ் கட்­சியின் தலை வர் சோனியா காந்தி ஆகி­யோரை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்கு எனக்கு சந்­தர்ப்பம் கிடைத்­தது. இந்த பேச்­சு­வார்த்­தை­களின் போது­ இ­லங்­கைக்கும் இந்­தி­யா­வுக்­கு­மி­டையில் நிலவும் தொடர்­பு­களை மேலும் பலப்­ப­டுத்­து­வது குறித்து ஆராய்ந்தோம். 

இந்­தி­யாவும் இலங்­கையும் இணைந்து முன்­னெ­டுக் கும் வேலைத்­திட்­டங்கள் தொடர்பில் கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட இணக்­க­ப்பா­டு­களின் அடிப்­ப­டை­யி­லான திட்­டங் கள் குறித்து இந்­தியப் பிர­த­ம­ருடன் கலந்­தா­லோ­சித்தேன். 

அவற்றின் முன்­னேற்றம் குறித்து பேசப்­பட்­டது. சில திட்­டங்­களை முன்­னெ­டுப்­பதில் தாமதம் ஏற்­பட்­டி­ருக்­கி­றது. அவை தொடர்­பிலும் பேசப்­பட்­டது. இங்கு இரண்டு செயற்றிட்டங்களை இந்தியாவும் ஜப்பானும் இணைந்து இலங்கை யில் முன்னெடுக்கவுள்ளன. 

இது ஒரு விசேட அம்சமாகும். இன்று இந்தியாவுக்கும் ஜப்பானுக் குமிடையில் காணப்படுகின்ற நட்பு றவானது ஆசிய ஆபிரிக்க அபிவி ருத்தித் தளத்தில் எவ்வாறான பங் களிப்பை வகிக்கும் என்பது குறித் தும் கலந்துரையாடினோம் என்றார்.