திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று 18 மணி நேர நீர்விநியோக தடைப்படும் என  நீர் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இன்று காலை 8 மணி முதல் நாளை அதிகாலை 2 மணிவரையில் கொழும்பு, தெஹிவளை – கல்கிஸ்சை, கோட்டை, கடுவலை ஆகிய மாநகர சபைகளுக்குட்பட்ட பகுதிகளிலும் மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகர சபைக்குட்பட்ட பகுதிகளிலும் கொடிகாவத்த, முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலும் ரத்மலானை மற்றும் சொய்சாபுர தொடர்மாடி குடியிருப்புகளுக்கும் நீர்விநியோகம் தடைப்படும் என நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.