கிழக்கு ஐரோப்பிய நாடான குரோஷியாவில் உள்ள நகரம் கிரிங்கா. இந்த நகரத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஜுர் கிராண்டோ என்ற ரத்தக்காட்டேரியின் கதையைக் கேட்கவே குரோஷியா நாட்டிற்குள் சுற்றுலாப் பயணிகள் குவிவதாக அந் நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த சுவாரசிய கதை இது தான், 

"கிரிங்கா நகரத்தில் 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்தான் ஜுர் கிராண்டோ. 1959ல் பிறந்த ஜுர் தனது மனைவி மீது மோகத்தில் திளைத்திருந்துள்ளார். இவ்வாறிருக்க நோய் தாக்கியதில் 1656ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார்.

மனைவியின் மீதான தீராத காதல் அவரை ரத்தக்காட்டேரியாக அவதாரம் எடுக்க வைத்தது. இரவு நேரத்தில் தினம் வீட்டுக்கதவை தட்டி மனைவிக்கு தொந்தரவு கொடுப்பாராம். 

பயந்து போன மனைவி ரத்தக்காட்டேரி கணவனிடம் இருந்து தப்பிக்க மந்திரவாதியை நாடியுள்ளார். உடனே வீட்டு வாசலில் எந்திர தகடு கட்டி ஜுர் வருகைக்கு தடை போட்டார் மந்திரவாதி. 

மனைவியுடன் சேர முடியலையே என்ற கோபம் வெறியாக மாறவே ஜுர் வீடு வீடாக போய் கதவை தட்டியுள்ளார். இரவு நேரமானால் கதவு தட்டும் சத்தம் கேட்டு 16 ஆண்டுகளாக மக்கள் அலறி துடித்துள்ளனர்.