விடுதலைப்புலிகள் காலத்தில் மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் இருந்த உறவு அம்பலமாகியது.!

Published By: Robert

24 Nov, 2017 | 03:17 PM
image

விடுதலைப்புலிகளின் காலத்தில் பொலிஸாருக்கும் பொது மக்களுக்குமான உறவு நெருக்கமாக இருந்தது. இதனால் பிரச்சினைகளை உடனுக்குடன் தெரியப்படுத்தி தீர்வுகளை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது என பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில், மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நேற்று இடம்பெற்ற மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ரி.கணேசநாதன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் சிவில் சமூக பிரதிநிதிகள் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதில் கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறுகின்ற குற்றச் செயல்களை கட்டுப்படுத்தல் மற்றும் சட்டம் ஒழுங்கை பேணுதல் போன்ற விடயங்கள் ஆராயப்பட்டன.

கிராம மற்றும் மாவட்ட மட்டங்களில் சிவில் பாதுகாப்பு குழுக்களின் பங்களிப்பின் அவசியம் பற்றியும், அவர்களின் ஒத்துழைப்பு குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கு இன்றியமையாத ஒன்றாகும் என வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியினால் வலியுறுத்தப்பட்டது.

இதில் கலந்துகொண்ட சிவில் சமூக பிரதிநிதிகள் தங்களின் கருத்துக்களையும் தெரிவித்தனார்.

இதன்போது விடுதலைப்புலிகளின் காலத்தில் பொது மக்களுக்கும் அதன் பொலிஸ் துறைக்கும் இடையில் நெருங்கிய உறவு காணப்பட்டது.

இது குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கு பெரும் உதவியாக இருந்தது. ஆனால் தற்போது பொலிஸாருக்கும் பொது மக்களுக்குமான உறவில் இடைவெளி காணப்படுகிறது. அதற்கு மொழியும் ஒரு தடையாக இருக்கிறது. இதனை கருத்தில் எடுக்க வேண்டும் என்றும் பிரதிநிதிகளால் தெரிவிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55