முதலைகளுடன் நான்கு இரவுகளைக் கழித்த நண்பர்களின் அனுபவம்

Published By: Robert

24 Nov, 2017 | 10:37 AM
image

சதுப்பு நிலத்தில் சிக்கி  முத­லை­களால் சூழப்­பட்­டி­ருந்த தமது காரின் கூரையில் 4  இர­வு­களைப் பசி­யுடன் கழித்த  நிலையில் இரு நண்­பர்கள் உலங்­கு­வா­னூர்தி  மூலம் மீட்­கப்­பட்ட சம்­பவம்  அவுஸ்­தி­ரே­லி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.

மேற்கு அவுஸ்­தி­ரே­லி­யாவில் புரூமி நக­ரி­லி­ருந்து சுமார் 100  கிலோ ­மீற்றர் தொலை­வி­லுள்ள   பிராந்­தி­யத்­துக்கு  தமது நாய் சகிதம் காரில் மீன் பிடிக்கச் சென்ற பியு பிரைஸ் மோரிஸ் (37  வயது), சார்ளி வில்­லியம்ஸ் (19  வயது)  என்ற நண்­பர்­களே இவ்­வாறு சதுப்பு நிலத்தில் சிக்கி  ஸ்தம்­பி­த­ம­டைந்து நின்ற தமது காரின் கூரையில் 4  இர­வு­களைக் கழித்­துள்­ளனர்.

இந்­நி­லையில் பொலி­ஸா­ருடன்  இணைந்து அவர்­களைத் தேடும் பணியில் ஈடு­பட்­டி­ருந்த உலங்­கு­வா­னூர்­தி­யொன்றால் அவர்கள் 5  ஆவது நாள் மீட்­கப்­பட்­டனர். 

சதுப்பு நிலத்தில் வாகனம் சிக்­கிய  முதல் நாள் அவர்கள் தம்­மி­ட­மி­ருந்த இரு ஆட்­டி­றைச்சி துண்­டு­க­ளையும் சோஸேஜ் உண­வு­க­ளையும்  வாட்டி உண்­டனர். அதே­ச­மயம்  அவர்கள் தம்மால் எடுத்து வரப்­பட்ட 48  தண்ணீர் போத்­தல்­களில் 46  போத்­தல்­க­ளி­லி­ருந்த  நீரை அருந்தி  தமது தாகத்தைப் போக்கிக் கொண்­டுள்­ளனர். இரவு நேரத்தில் முத­லைகள் தாக்­கலாம் என்ற அச்சம் கார­ண­மாக அவர்கள்  காரின் கூரை­யி­லேயே படுத்து  உறங்க நேர்ந்­தது.

இதன்­போது  சுமார் ஒவ்­வொரு 12  மணி நேரத்­துக்கு ஒரு தட­வையும்  பாரிய கடல் அலை வந்து அந்தக் காருக்கு மேலாக அடித்துச் சென்­ற­தாக அந்த நண்­பர்கள் கூறு­கின்­றனர். 

அத்­துடன்   இரவுப் பொழு­து­களில் தாம் காரி­லி­ருந்து  எப்­போது  இறங்­குவோம் என எதிர்­பார்த்து  அந்தக் காரைச் சூழ்ந்து  முத­லைகள்  கூட்­ட­மாக வட்­ட­மிட்­டி­ருந்ததால் இரவின் ஒவ்­வொரு நிமி­டத்­தையும் அச்­சத்தின் மத்­தியில் தாம் கழித்­த­தாக அவர்கள் தெரி­வித்­தனர். இந்­நி­லையில் மீட்­கப்­ப­டு­வ­தற்கு முதல்நாள் முத­லை­யொன்று தமது நாயை தாக்க முயற்­சித்­த­தாக  அவர்கள் கூறுகின்றனர்.

எனினும் எவராவது தம்மை கண்டுபிடித்து மீட்பார்கள் என்ற நம்பிக்கையை  தாம் கைவிடவில்லை என அவர்கள்  தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right