பூமி­யா­னது செயற்கை ஒளியால் பெரிதும் மாச­டைந்து வரு­வ­தா­கவும் இதனால் தாவ­ரங்கள், நுண்­ணு­யிர்கள் மற்றும் இரவில் நட­மாடும் விலங்­குகள் என்­பன கடும் பாதிப்பை எதிர்­கொண்டு வரு­வ­தா­கவும் ஜேர்­ம­னிய விஞ்­ஞா­னிகள் எச்­ச­ரித்­துள்­ளனர்.

 வீதிக் கம்­பங்­க­ளிலும் கட்­ட­டங்­க­ளிலும் கார்கள் உள்­ள­டங்­க­லான வாக­னங்­க­ளிலுமிருந்து வெளிப்­படும்  செயற்கை  ஒளியா­னது உயி­ரி­னங்­க­ளி­னதும் விலங்­கு­க­ளி­னதும் உயி­ரியல் செயற்­பா­டு­க­ளுக்கு பாரிய பாதிப்பை ஏற்­ப­டுத்­து­வ­தாக இந்த ஆய்­வுக்கு தலைமை தாங்­கிய பொட்ஸ்டாம் பிராந்­தி­யத்­தி­லுள்ள  ஜி.எப்.இஸட். ஜேர்மன் பூகர்ப்­ப­வியல் ஆய்வு நிலை­யத்தைச் சேர்ந்த கலா­நிதி கிறிஸ்­தோப்பர் கைபா கூறினார். செயற்கை ஒளியால் உல­கெங்கும் பல பிராந்­தி­யங்­களில் இரவு நேர இருள்  சூழ்­நிலை இழக்­கப்­பட்­டுள்­ள­தாக  ஆய்­வா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர்.

2012  ஆம் ஆண்­டி­லி­ருந்து 2016  ஆம் ஆண்டு வரை­யான காலப் பகு­தியில்  செய்­ம­தி­யி­லி­ருந்து எடுக்­கப்­பட்ட புகைப்­ப­டங்­களை அடிப்­ப­டை­யாக வைத்து இந்த ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது.

இதன்­போது மோதல்­களால் பாதிக்­கப்­பட்­டுள்ள சிரியா மற்றும் யேமன் ஆகிய நகர்­களில் மட்­டுமே குறைந்­த­ள­வான ஒளி மாசாக்கம் அவ­தா­னிக்­கப்­பட்­டுள்­ளது. அதே­ச­மயம் அமெ­ரிக்கா, பிரித்­தா­னியா, ஸ்பெயின் ஆகிய நாடு­களில் அள­வுக்­க­தி­க­மான  செயற்கை ஒளி அவ­தா­னிக்­கப்­பட்­டது.

ஒளி மாசாக்­கத்தின் அள­வா­னது   தென் அமெ­ரிக்கா, ஆபி­ரிக்கா மற்றும் ஆசியா ஆகிய நாடு­களில் அதி வேக­மாக அதி­க­ரித்து வரு­வது மேற்­படி செய்­மதி புகைப்­ப­டங்கள் மூலம் அறி­யப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

ஒளி மாசாக்­கத்தால் மிகவும் மோச­மாக பாதிக்­கப்­பட்ட  பிராந்­தி­ய­மாக வட அமெரிக்காவுள்ளது. அங்கு  டெற்ரோயிட், ரொரன்டோ, நியூயோர்க், போஸ்டன்  உள்ளடங்கலான நகர்கள்  ஒளி மாசாக்கத்திற்கு பெரிதும் பங்களிப்புச் செய்து வருவனவாக  உள்ளதாக கூறப்படுகிறது.