இலங்கை – இந்­திய அணிகள் மோதும் இரண்­டா­வது டெஸ்ட் போட்டி இந்­தி­யாவின் மராட்­டிய மாநிலம் நாக்­பூரில் இன்று தொடங்­கு­கி­றது.

இலங்கை கிரிக்கெட் அணி இந்­தி­யா­விற்கு சுற்றுப் பயணம் மேற்­கொண்டு 3 டெஸ்ட் போட்­டிகள், 3 ஒருநாள் போட்­டிகள், 3 இரு­ப­துக்கு 20 போட்­டிகள் கொண்ட தொடரில் விளை­யா­டு­கின்­றது. 

இவ்­விரு அணி­களும் மோதிய முதல் டெஸ்ட் போட்டி சம­நி­லையில் முடிந்­தது. இந்­நி­லையில் இரண்­டா­வது டெஸ்ட் போட்டி மராட்­டிய மாநிலம் நாக்­பூரில் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்­ப­மா­கின்­றது.

கொல்­கத்­தாவில் நடந்த முதல் டெஸ்டின் முதல் 2 நாட்கள் மழையால் பெரிதும் பாதிக்­கப்­பட்­டன. இப்­போட்­டியில் முதல் இன்­னிங்ஸில் திண­றிய இந்­திய அணி 2-ஆவது இன்­னிங்ஸில் மீண்­டது. 

வேகப்­பந்து வீச்­சுக்கு சாத­க­மான ஆடு­க­ளத்தில் இலங்கை அணியின் சுரங்க லக்மால் மற்றும் தசுன் சானக்க ஆகியோர் சிறப்­பாக செயற்­பட்­டனர். 

முதல் டெஸ்டில் 8 விக்கெட்டுக்கள் வீழ்த்­திய இந்­திய பந்­து­வீச்­சாளர் புவ­னேஷ்வர் குமார் திரு­மணம் கார­ண­மாக எஞ்­சி­யுள்ள 2 டெஸ்ட் போட்­டி­க­ளி­லி­ருந்து வில­கி­யுள்ளார். அவ­ருக்கு பதில் வேகப்­பந்து வீச்­சாளர் இஷாந்த் சர்மா இடம் பெறுவார்.

இதேபோல் இந்­தி­யாவின் தொடக்க வீரர் ஷிகார் தவான் இன்று ஆரம்பமாகும் டெஸ்ட் போட்டியில் விளை­யா­ட­வில்லை. இதனால் முரளி விஜய் தொடக்க வீர­ராக கள­மி­றங்­கு­கிறார்.

முதல் டெஸ்டை போலவே இன்று தொடங்கும் 2ஆ-வது டெஸ்­டிலும் வேகப்­பந்து ஆடு­க­ளத்தை அமைக்க வலி­யு­றுத்­தப்­பட்டிருக்­கி­றது. 

நாக்பூர் டெஸ்டில் வெற்றி பெற்று தொடரில் முன்­னிலை பெறும் ஆர்­வத்தில் இந்­தியா உள்­ளது.

அதேபோல் சந்­திமால் தலை­மை­யி­லான இலங்கை அணியில் சதீர சம­ர­விக்­ரம, கரு­ணா­ரத்ன, திரி­மான்ன, அஞ்­சலோ மெத்­தியூஸ், டில்­ருவன் பெரேரா, டிக்­வெல்ல என பல­மான துடு­ப்பாட்ட வரிசை உள்­ளது. 

பந்­து­வீச்சில் சுரங்க லக்மால், தசுன் சானக்க, கமகே, ஹேரத், டில்­ருவன் பெரேரா ஆகியோர் இருக்­கி­றார்கள். 

இலங்கை அணியும் இந்­தி­யாவை வீழ்த்தி தொடரில் முன்­னிலை பெறும் முனைப்பில் இருப்­பதால் ஆட்டம் விறு­வி­றுப்­பாக இருக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.