அட்டன் தொண்­டமான் தொழிற்­ப­யிற்சி நிலை­யத்தின் பெயர் பல­கையில் அவ­ரது பெயர் நீக்­கப்­பட்­ட­மைக்கு எதிர்ப்பு தெரி­விக்கும் வகை­யிலும் பெயர்ப்­ப­ல­கையில் மீண்டும் தொண்­ட­மானின் பெயரை உள்­வாங்­கு­வதை வலி­யு­றுத்தும் பொருட்டும் நேற்று  ஊவா மாகா­ண­ச­பையில் பிரே­ரணை சமர்ப்­பிக்­கப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்­டுள் ­ளது.  ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்­ட­மானால் சபையில் சமர்­பிக்­கப்­பட்ட மேற்­படி அறிக்கை மாகாண அமை ச்சர் சாலிய சுமேத த சில்­வா­வினால் வழி மொழி­யப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்­ட­துடன் குறித்த பிரே­ரணை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­ பால  சிறி­சே­ன­வுக்கும் அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்­ளது. 

பிரே­ர­ணையில் கூறப்­பட்­டுள்­ள­தா­வது,  

மலை­யக மக்­களின் உரி­மைக்­கா­கவும் வளர்ச்­சிக்­கா­கவும் வாழ்நாள் முழு­வ­தையும் அர்ப்ப­ணிப்பு செய்து அரும்­சே­வை­யாற்­றிய தலை­வ­ராக அமரர். சௌமி­ய­மூர்த்தி தொண்­ட­மானை  சர்­வ­தேச நாடு­களும்  ஏற்­றுக்­கொண்­டுள்­ளன. 

அன்­னாரின்  பெயரால் ஸ்தாபிக்கப்­பட்ட நிறு­வ­னங்­களில் இருந்து அவ­ரது பெயர் நீக்­கப்­பட்­ட­மைக்­காக மலை­யகத்தில் பதற்ற நிலை தொடர்ந்திருந்து வருகின்றது. போராட்டங்கள் இடம்பெறுகின்றன.  ஆகவே இவ்விடயத்தில் ஜனாதிபதி தலையீடு செய்ய வேண்டுமென இப்பிரேரணையில் வலி யுறுத்தப்பட்டுள்ளது.