நாளை இரவு 9 மணி தொடக்கம்  காலை 5 மணி வரை கொட்டாஞ்சேனை ஹெட்டியாவத்தை சந்தியில் இருந்து ஹிப்பகேவத்த சந்தி வரையில் வீதி மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த வீதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள நீர் குழாய் பொருத்தல் செயற்பாடு காரணமாக வீதியை முழுமையாக மூடி குறித்த செயற்பாடுகளை மேற்கொள்ள அனுமதியளிக்குமாறு கிடைக்கப்பெற்ற கோரிக்கைக்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்