தேசியக் கொடியை நான் ஏற்றவில்லையே தவிர என்னுடைய அதிகாரியை ஏற்றுமாறு பணித்ததுடன் தேசிய கொடியேற்றப்படும் பொழுது அதற்குரிய மாரியாததையும் கொடுத்திருந்தேன் என வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

 

அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

 

தேசிய கொடியை நான் அவமதிக்கவில்லை. தேசியக் கொடியை அவமதிப்பது என்பது நான் தேசிய கொடியை தீயிட்டு எரித்தாலோ அல்லது அதை கிழே போட்டு மிதித்தாலோ அல்லது கொடியை கிழித்து எறிந்தாலோ தான் தேசிய கொடியை அவமதித்ததாக வரும். 

தேசிய கொடியை நான் ஏற்றவில்லையே தவிர என்னுடைய அதிகாரியை ஏற்றுமாறு பணித்ததுடன் தேசிய கொடியேற்றப்படும் பொழுது அதற்குரிய மாரியாததையும் கொடுத்திருந்தேன். நான் தேசியக் கொடியை அவமத்திததாக சில ஊடகங்களுக்கும் அரசியவாதிகளும் இதனை பெரிதாகியுள்ளனர்.

 

தேசியக் கொடியை ஏற்றாமல் விட்டது அரசியல் சார்ந்த விடயம் அது இனவாதம் சார்ந்த விடயம் இல்லை. தேசிய கொடி மூவின மக்களையும் சரியாக பிரதிநிதித்துவம் செய்யவில்லை. தேசியக் கொடியை எல்லோரும் வணங்கிதான் ஆகவேணும் எண்டு கட்டளை இடுவதென்பது சரியாக இருக்காது என தெரிவித்தார்.