யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற வலயத்துக்குட்பட்ட பகுதிகளில் பிடிபட்ட சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான ஆயிரம் கிலோ கஞ்சா போதைப்பொருள் இன்று தீமூட்டி எரிக்கப்பட்டது.

வழக்குகள் நிறைவடைந்து சான்றுப் பொருள்களாகக் காணப்பட்ட கஞ்சா போதைப் பொருளே இவ்வாறு அழிக்கப்பட்டன.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந் ஆகியோர் முன்னிலையிலேயே இந்த சான்றுப் பொருள்கள் நீதிமன்ற ஊழியர்களினால் தீமூட்டி எரித்து  அழிக்கப்பட்டன.