சினிமா பைனான்சியர்களிடம் வாங்கிய கடனுக்காக தன் பங்களாவை விற்று அதை அடைத்ததாக நடிகர், இயக்குனர் பார்த்திபன் கூறியுள்ளார்.

கடனை அடைத்தது பற்றி பார்த்திபன் அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

நான் சினிமா பைனான்சியர் பல பேர் கிட்ட வட்டிக்கு பணம் வாங்கி இருக்கேன். அதுல அன்பும் ஒருவர். வாங்குன பணத்தை ஒத்துக்கிட்ட வட்டியோட சொன்ன தேதியில் கொடுக்க, நான் முதன் முதலாக வாங்குன பங்களாவை கூட வித்திருக்கிறேன்.

ஆனால் யார்கிட்டயும் தலைகுனிஞ்சி நின்றதில்ல. அந்த திமீர் என்னைப் பிடிச்சிருக்கு. எனக்கும் பிடிச்சிருக்கு. நாலு படத்தில் நடிச்சி கடனை அடிச்சிட்டு மறுபடியும் படம் எடுப்பேன். அது தான் எனக்கு ஏற்படுகிற விடுமுறை.

நான் ஆதங்கப்பட்டு குரல் கொடுக்கிறது சக நண்பர்களின் பிரச்சினைகளுக்கு மற்றபடி நான் சந்திக்கிற பிரச்சினைகளை சவாலாகத்தான் எதிர்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.