இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார்.

இச் சந்திப்பு இன்று டில்லியில் இடம்பெற்றுள்ளது.

நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இந்தியாவுக்கு சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பழைமை வாய்ந்த கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் வழிபாடுகளை மேற்கொண்டார்.

இதையடுத்து நேற்று புதன்கிழமை டில்லியை சென்றடைந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார்.