திரைப்பட இயக்குனர் பெனட் ரத்னாயக்கவின் தாயார் காலஞ்சென்ற நந்தா ரத்னாயக்கவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இறுதி அஞ்சலி செலுத்தினார்.

பூதவுடல் வைக்கப்பட்டுள்ள பத்தரமுல்ல, பெலவத்தையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்திற்கு நேற்று இரவு விஜயம் செய்த ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன் பெனட் ரத்னாயக்க உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார்.