கொழும்பு கோட்டை மற்றும் புறக்கோட்டை பிரதேசங்களில் நிலவிவரும் அதிக வாகன நெரிசலைக் கருத்திற்கொண்டு, பிரதான பாதைகளைத் தவிர்த்து பாதசாரிகள் பாதுகாப்பாக பயணிக்கக்கூடிய வகையில் நிர்மாணிக்கப்பட்டுவரும் நடைபாதை வலையமைப்பின் கீழ் கொழும்பு டீ.ஆர். விஜேவர்தன மாவத்தையில் லேக்ஹவுஸ் நிறுவனத்திற்கு அண்மையிலிருந்து ஓல்கொட் மாவத்தை வரையான முதற்கட்டத்தின் நிர்மாணப்பணிகள் நிறைவு செய்யப்பட்டு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் இன்று காலை மக்களிடம் கையளிக்கப்பட்டது.

பெருநகரங்கள் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சினால் செயற்படுத்தப்படும் கொழும்பு நகரை அண்மித்த நகர அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் ரூபா 17 மில்லியன் செலவில் இலங்கை கடற்படையினரின் ஒத்துழைப்புடன் இந்த முதற்கட்ட நிர்மாணப்பணிகள் செய்யப்பட்டுள்ளன.

நடைபாதையை திறந்து வைத்த ஜனாதிபதி அதனைப் பார்வையிட்டார்.

அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, பெருநகரங்கள் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.