அட்டன் நகரப்பகுதியில் புதிதாக கட்டிட நிர்மாண பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர் மின்சாரம் தாக்கிய நிலையில் 3 ஆவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் படுகாயங்களுக்குள்ளாகிய நிலையில், டிக்கோயா கிழங்கன் மாவட்டவைத்தியசாலையில் அனுமதிமதிக்கபட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை 9.30 மணி அளவில் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனவே படுகாயங்களுக்குள்ளானவர் நாவலப்பிட்டி, கெட்டபுல தோட்டத்தைச் சேர்ந்த 34 வயதுடைய எஸ். சம்பத் என்பரே இவ்வாறு 3 ஆவது மாடியில் இருந்து விழுந்து படுகாயங்களுக்குள்ளாகியுள்ளதாக அட்டன் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

காயங்களுக்குள்ளான நபர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கபடவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.