மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள ஈரக்குலம் பிரதேசத்தில் இருந்து சிறியரக பட்டா வானத்தில் 3 பசு மாடுகளை திருடிச் சென்ற இருவரை எதிர்வரும் 29 ஆம் திகதிவரை விளக்கமறியவில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிவான் நேற்று புதன்கிழமை உத்தரவிட்டார்.

பொலிசார் கரடியனாறு பகுதியில் வீதிச் சோதனை நடவடிக்கையில் சம்பவதினமான செவ்வாய்கிழமை இரவு ஈடுட்டுக் கொண்டிருந்தபோது சிறியரக பட்டா வானத்தில் இருவர் 3 பசுமாடுகளை எடுத்துச் சென்றநிலை, சந்தேகம் கொண்ட பொலிசார் இதனை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் அனுமதிப்பத்திரமின்றி பசுமாடுகளை எடுத்துச் சென்றனர்.

என்பதை கண்டுபிடித்ததையடுத்து பொலிசார் இருவரை கைது செய்ததுடன் பசு மாடுகளையும் வாகனத்தையும் பொலிஸார் கைப்பற்றினர்.

இது தொடர்பான விசாரணையில் ஈரலக்குளம் பகுதியில் உள்ள  பசு மாடுகளை திருடிச் சென்றனர் என்பதுடன் குறித்த வாகனம் ஓட்டுமாவடி பிரதேசத்தைச் சேர்ந்தது என்பதுடன் கைது செய்யப்பட்டவர்கள் வாகனேரி பகுதியைச் சேர்தவர்கள் எனவும் இவர்களுக்கு எதிராக திருட்டு மற்றும் மிருகவதை போன்ற குற்றங்களின் கீழ் வழக்குத் தாக்குதல் செய்து ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் முன்னிலையில் நேற்று புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்போது இவர்களை எதிர்வரும் 29 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.