வவுனியாவில் 50 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரை கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை என அவரது குடும்தத்தினர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

கடந்த (20-11) அன்று காலை 11.00 மணியளவில் வவுனியா கூமாங்குளத்தை சேர்ந்த 50 வயதான பெனடிக் சூசைநாதன் என்பவர் வெளியில் சென்றதாகவும் இதுவரை வீடு திரும்பவில்லையெனவும் உறவினர்கள் நண்பர்களின் வீடுகளுக்கும் தொடர்புகொண்டு கேட்டபோது அங்கும் அவர் இல்லாத காரணத்தினால் குடும்பத்தினர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இவர் தொடர்பில் விபரங்கள் கிடைக்கப்பெறும் பட்சத்தில் அவரின் மகனான பிரியதர்ஷனின் தொலைபேசி இலக்கமான ‎0765288183 என்னும் இலக்கத்தினூடாக தொடர்புகொள்ளுமாறு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.