உலகத் தமி­ழர்­களை ஒரே குடையின் கீழ் இணைக் கும் முக­மாக எதிர்­வரும் 2018 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 5,6,7ஆம் திக­தி­களில் இந்­தி­யாவின் சென்­னையில் மாபெரும் மாநாடு ஒன்று நடத்­து­வ­தற்­கான ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டு­வ­ரு­வ­தாக உலக தமிழ் வம்­சா­வளி அமைப்பின் ஒருங்­கி­ணைப்­பா­ளரும் உலக தமிழ் வர்த்­தக சங்­கத்தின் தலை­வ­ரு­மான சென்­னை யைச் சேர்ந்த ஜெ.செல்­வ­குமார் தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்­பாக அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,

தமி­ழர்­களின் வாழ்­வி­ய­லையும் மன­வள மேம்­பாட்­டையும் கல்வி,கலை,கலா­சாரம், தமிழ்ப் பாரம்­ப­ரியம் போன்­ற­வை­களை அய­லக தமி­ழர்­க­ளுக்கு மறவாமல் இருக்க வழிவகை­ செய்ய வேண்டும். அத்துடன் தமி­ ழர்கள் உலகம் பூரா­கவும் பரந்து வாழ்ந்து வரு­கின்­ றார்கள். அவர்கள் பல உயர் பத­வி­க­ளிலும் இருக்­கின்­ றார்கள்.

எனவே இவர்கள் அனை­வ­ரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து அவர்­களை ஒரு­வ­ருக்கு ஒருவர் அறி­முகம் செய்து கொள்­வ­தற்கும் அதன் மூல­மாக தமி­ழர்கள் தங்­க­ளு­டைய கலை, கலா­சாரம், கல்வி, பொரு­ளா­தாரம் போன்ற துறை­களில் தொடர்­பு­களை ஏற்­ப­டுத்தி கொள்­வதன் மூல­மாக தங்­க­ளு­டைய தொடர்­பு­களை விரி­வு­ப­டுத்திக் கொள்ள முடியும்.

இதற்­காக இது­வ­ரையில் எந்த ஒரு அமைப்பும் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. அதற்­கா­கவே எங்­க­ளு­டைய உலக தமிழ் வம்­சா­வளி அமைப்பு என்ற ஒரு அமைப்பை ஆரம்­பித்­தி­ருக்­கின்றோம்.

இம்­மா­நாட்டில் இலங்­கை­யர்­களும் கலந்து கொள்ள வேண்டும் என்­பது எமது எதிர்­பார்ப்­பாகும்.கலந்து கொள்ள விரும்­பு­கின்­ற­வர்கள் தங்­க­ளு­டைய விமான டிக்கட் உட்­பட அனைத்து செல­வு­க­ளையும் தாங்­களே பொறுப்­பேற்றுக் கொள்ள வேண்டும்.மாநாட்டில் கலந்து கொள்­வ­தற்கு எந்த ஒரு கட்­ட­ணமும் அற­வி­டப்­ப­ட­மாட்­டாது. இதில் கலந்து கொள்ள ஆர்­வ­முள்­ள­வர்கள் இலங்­கையில் எமது அமைப்பின் ஊடக ஒருங்­கி­ணைப்­பா­ள­ராக செயற்­ப­டு­கின்ற எஸ்.தியாகு 077-7757815 என்ற தொலை­பேசி இலக்­கத்­துடன் தொடர்பு கொள்­ளவும்.

மாநாட்­டிற்கு வருகை தரு­கின்­ற­வர்கள் தங்களுடைய வருகையை உறுதிப்படுத்தினால் மாத்திரமே அவர் களுக்கான அடையாள அட்டை உட்பட ஏனைய விட யங்கள் கவனத்தில் கொள்ளப்படும் என்பதையும் கவ னத்தில் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.