தேநீர் விற்க செல்­லுங்கள் மோடிக்கு எதி­ரான டுவிட்டால் சர்ச்சை

Published By: Robert

23 Nov, 2017 | 10:01 AM
image

பிர­தமர் நரேந்திர மோடியை தேநீர் விற்க செல்­லுங்கள் என்று காங்­கிரஸ் கட்­சி­யினர் பதி­விட்­டுள்ள டுவிட்டர் செய்­தியால் சர்ச்சை எழுந்­துள்­ளது.

இளைஞர் காங்­கிரஸ் கட்­சி­யா­னது யுவதேஷ் என்ற பெயரில் டுவிட்­டரில் வெளி­யிட்­டுள்ள செய்­தியில், பிர­தமர் மோடி, அமெ­ரிக்க ஜனா­தி­பதி ட்ரம்ப் மற்றும் இங்­கி­லாந்து பிர­தமர் தெரசா மே ஆகியோர் ஒன்­றாக புகைப்­ப­டத்தில் நிற்­கின்­றனர். அதில், மோடி மற்ற இரு தலை­வர்­க­ளிடம், எதிர்க்­கட்­சிகள் தன்னை இலக்­காக கொண்டு மீம்கள் அனுப்­பு­கின்­றனர் என கூற முயல்­கிறார்.

அப்போது அவர் மெயின்­மெயின் என கூறு­கிறார். ட்ரம்ப் மீம் என கூற வேண்டும் என அதனை திருத்­து­கிறார். அதற்கு தெரசா மே, மோடி­யிடம், நீங்கள் சென்று தேநீர் விற்­பனை செய்­யுங்கள் என கூறு­கிறார் என்று பதி­வா­கி­யுள்­ளது.  ஆயினும் உட­ன­டி­யாக இந்த பதிவு நீக்­கப்­பட்டு விட்­டது.

காங்­கிரஸ் கட்­சியின் இந்த டுவிட்­டர் செய்தியால் பா.ஜ.க. மூத்த தலை­வர்கள் கடும் அதி­ருப்­தியில் உள்­ளனர். மத்­திய அமைச்­சர்கள் டுவிட்டர் வழியே கண்­ட­னமும் தெரி­வித்து வரு­கின்­றனர்.

எனினும், இது­போன்ற மீம்­களை நாங்கள் வன்­மை­யாக மறுக்­கிறோம். காங்­கிரஸ் கட்­சி­யா­னது பிர­தமர் மற்றும் அனைத்து அர­சியல் கட்­சி­யி­ன­ருக்கும் மரி­யாதை அளிக்கும் கலா­சா­ரத்­தினை கொண்­டுள்­ளது என காங்­கிரஸ் தரப்பில் கூறப்­ப­டு­கி­றது.

குஜ­ராத்தில் சட்­ட­மன்ற தேர்தல் நடை­பெறவுள்ள நிலையில் காங்­கிரஸ் கட்­சியின் இந்த டுவிட் பதிவு அக்­கட்­சிக்கு பின்­ன­டைவை ஏற்­ப­டுத்தக்கூடும் என கூறப்­ப­டு­கி­றது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47