புதிய ஜனா­தி­ப­தி­யாக எமர்ஸன் நாளை பத­வி­யேற்­கிறார்.!

Published By: Robert

23 Nov, 2017 | 10:43 AM
image

சிம்­பாப்­வேயின் ஜனா­தி­ப­தி­யாக நீண்ட காலம் சேவை­யாற்­றிய ரொபேர்ட் முகாபே எவரும் எதிர்­பா­ராத வகையில் நேற்று முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை இரவு தனது பத­வியை இரா­ஜி­னாமா செய்­த­தை­ய­டுத்து,  புதிய ஜனா­தி­ப­தி­யாக முன்னாள்  உப ஜனா­தி­பதி எமர்ஸன் மனன்­கக்வா   நாளை வெள்­ளிக்­கி­ழமை பத­வி­யேற்­க­வுள்ளார்.

 ரொபேர்ட் முகா­பேயால் பணி நீக்கம் செய்­யப்­பட்­டி­ருந்த எமர்ஸன் இரு வாரங்­க­ளுக்கு முன்னர் நாட்டை விட்டு வெளி­யேறி தென் ஆபி­ரிக்­காவில் தஞ்­ச­ம­டைந்­தி­ருந்தார்.

எமர்­ஸனின் பணி நீக்­க­மா­னது அந்­நாட்டு அர­சாங்­கத்தில் இரா­ணுவம் தலை­யீடு செய்­யவும் முகா­பேயின் 37  வருட கால ஆட்சி முடி­வுக்கு கொண்டு வரப்­ப­டவும் வழி­வகை செய்­தது.

முகாபே (93  வயது)  பத­வியை இரா­ஜி­னாமா செய்­தமை தொடர்­பான செய்தி வெளி­யா­னதும் அந்­நாட்டு மக்கள் அதனை ஒரு விழா­வாகக் கொண்­டா­டினர்.

பாரா­ளு­மன்­றத்தில் முகா­பேக்கு எதி­ராக கண்­டனத் தீர்­மா­னத்தை கொண்டு வரு­வ­தற்­கான வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­ட­வி­ருந்த நிலையில் அவரால் அனுப்பி வைக்­கப்­பட்­டி­ருந்த  கடி­த­மொன்று வாசிக்­கப்­பட்­டது.

எது­வித தடை­யு­மற்ற வகையில் அமை­தி­யான அதி­கார கைமாற்றம் இடம்­பெ­று­வ­தற்கு வழி­யேற்­ப­டுத்தி தரும் வகையில் தான் பதவி வில­கு­வ­தா­கவும் தனது தீர்­மானம் தன்னால் சுய­மாக எடுக்­கப்­பட்­டுள்­ளது எனவும் முகாபே அந்தக் கடி­தத்தில் குறிப்­பிட்­டுள்ளார்.

 இந்­நி­லையில் முன்னாள் உப ஜனா­தி­பதி எமர்ஸன் (71  வயது) புதிய தேர்தல் இடம்­பெறும் வரை முகா­பேயின் பத­வியை வகிக்­க­வுள்­ள­தாக ஆளும் ஸனு-பி.எப். கட்­சியின் பேச்­சாளர் தெரி­வித்தார்.

அந்­நாட்டின் புதிய தேர்­தல்கள் எதிர்­வரும் 2018 ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் நடை­பெ­ற­வுள்­ளது. இந்­நி­லையில் எமர்ஸன் நாளை  வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெ­ற­வுள்ள வைப­வத்தில் ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்­க­வுள்­ள­தாக அந்­நாட்டு  அர­சாங்­கத்தால் செயற்­ப­டுத்­தப்­படும் சிம்­பாப்வே ஒலி­ப­ரப்புக் கூட்­டுத்­தா­பனம்  தெரி­விக்­கி­றது.

தனது அர­சியல் தந்­தி­ரோ­பாய நட­வ­டிக்­கைகள் தொடர்பில் 'முதலை'  என அழைக்­கப்­படும் எமர்ஸன் தென் ஆபி­ரிக்­கா­வி­லி­ருந்து தன்னால் வெளி­யி­டப்­பட்­டுள்ள அறிக் கையில்,  நாட்டை மீளக்கட்டியெழுப்ப மக்க ளை ஐக்கியப்பட அழைப்பு விடுத் துள்ளார்.

பதவி விலகும்வரை தன்னை கடவுள் மட்டுமே பதவியிலிருந்து வெளியேற்ற முடியும் என உரிமைகோரி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52