ஹத்துருசிங்க தொடர்பில் தீர்மானத்தை வெளியிட்டது இலங்கை கிரிக்கெட்

Published By: Priyatharshan

23 Nov, 2017 | 09:50 AM
image

பங்களாதேஷ் கிரிக்கெட் சபை சந்திக்க ஹத்துருசிங்கவை விடுவித்தால், இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிப்பதற்கு தயாராக உள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால மேலும் தெரிவிக்கையில்,

பங்களாதேஷ் கிரிக்கெட் சபை சந்திக்க ஹத்துருசிங்கவை விடுவித்தால் இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிப்பதற்கான நடவடிக்கையை எடுக்க தயாராகவுள்ளோம்.

இதுதொடர்பான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் பங்களாதேஷ் கிரிக்கட் சபையின் தலைவருக்கும் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதென அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் இலங்கை அணியின் பயிற்சியாளராக இருந்த கிரகம் போர்ட் கடந்த ஜுன் மாதம் இலங்கை அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகியதையடுத்து, நிக் போத்தாஸ் தற்காலிக பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக பங்களாதேஷ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ஹத்துருசிங்கவை நியமிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பத்திலிருந்தே முன்னெடுக்கப்பட்டு வந்துள்ள நிலையில், தற்போது இலங்கை கிரிக்கெட் சபை மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சந்­திக்க ஹத்­து­ரு­சிங்க இலங்கைக் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்­சி­யாள­ரா­­வது கிட்­டத்­தட்ட உறு­தி­யா­கி­யுள்­ள­து. 

ஆனாலும் ஹத்துருசிங்கவை பங்களாதேஷிலிருந்து விடுவித்துக்கொள்வதில் சட்ட சிக்கல் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இலங்கை அணிக்கு நிரந்தர தலைமைப் பயிற்சியாளர் ஒருவர் இல்லாத நிலையில், பங்­க­ளா­தேஷின் பயிற்­சி­யா­ள­ராக இருந்த இலங்கை அணியின் முன்னாள் வீரர் சந்­திக்க ஹத்­துரு­சிங்­கவை இலங்கை அணியின் தலைமைப் பயிற்­சி­யா­ள­ராக்க இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் பெரும் பிர­யத்­தனத்தை மேற்­கொண்­டது.

இதன் முயற்சியாக ஹத்துருசிங்க பங்களாதேஷ் பயிற்சியாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்.

எவ்­வா­றா­யினும், பங்­க­ளாதேஷ் கிரிக்கெட் அணியின் பயிற்­சி­யாளர் பத­வி­யி­லி­ருந்து ஹத்­து­ரு­சிங்க இது­வரை நீக்­கப்­ப­ட­வில்லை. அத்­துடன் கடந்த ஒக்­டோபர் மாதம் முதல் அவர் பங்­க­ளாதேஷ் செல்­லாமல், கடிதம் மூலம் அந்­நாட்டு கிரிக்கெட் சபைக்கு தனது ராஜி­னா­மாவை அறி­வித்­தி­ருந்தார்.

இதன் பின்­ன­ணியில், பங்­க­ளாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்­சி­யா­ள­ராக சந்­திக்க ஹத்­து­ரு­சிங்­கவை தக்க வைப்­ப­தற்­கான நம்­பிக்­கையை இழந்­துள்­ள­தா­கவும், அவரைப் பிர­தி­யீடு செய்வோர் குறித்து கவனம் செலுத்­து­வ­தா­கவும் பங்­க­ளாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவர் நஸ்முல் ஹஸன் ஊட­கங்­க­ளுக்கு தெரி­வித்­தி­ருந்தார்.

எனினும், அவ­ரு­டைய வரு­கையை தொடர்ந்து எதிர்­பார்த்­தி­ருப்­ப­தாக தெரி­வித்­துள்ள நஸ்முல் ஹஸன், ரா­ஜி­னாமா கடி­தத்தை ஏற்­றுக்­கொண்ட போதிலும், அதற்­கான உரிய கார­ணத்தை அவர் தெளி­வு­ப­டுத்த வேண்டும் எனவும் அவர் மீண்டும் வலி­யு­றுத்­தி­யி­ருந்தார்.

இதே­வேளை, குறித்த விடயம் தொடர்பில் எழுந்­துள்ள சட்ட சிக்­கல்­களை உட­ன­டி­யாக நிவர்த்தி செய்து தரு­மாறு இலங்கை கிரிக்கெட் நிறு­வ­னத்­திடம் ஹத்­து­ரு­சிங்க கோரிக்கை விடுத்­தி­ருந்­த­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 

இந்­நி­லையில் ஹத்­து­ரு­சிங்­கவை பயிற்­சி­யா­ள­ராக நியமிப்பது குறித்து இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம், பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35