மஹிந்த குறித்த ரணிலின் கூற்று.!

Published By: Robert

23 Nov, 2017 | 10:14 AM
image

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான அர­சாங்கம் இர­க­சி­ய­மாக கடன்­களை பெற்­றுள்­ள­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்த கூற்றை முற்­றாக மறுத்­துள்ள கூட்டு எதிர்க்­கட்சி, உரிய விசா­ர­ணை­களை மேற்­கொள்­ளு­ மாறு வலி­யு­றுத்தி சபா­நா­யகர் கரு­ஜெ­ய­ சூ­ரி­ய­வி­டத்தில் எழுத்­து­மூ­ல­மாக கோரி க்கை விடுத்­துள்­ளது.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கூட்டு எதிர்க்­கட்­சியின் உறுப்­பினர் கருத்து வெளியி­டு­கை­யி­லேயே இத்­த­க­வலை வெளியிட்­டனர்.

கூட்டு எதிர்க்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான தினேஷ் குண­வர்­தன, பந்­துல குண­வர்­தன, விமல்­வீ­ர­வன்ஸ, ரமேஷ் பத்­தி­ரன, மஹிந்த யாப்பா அபே­வர்­தன, ரஞ்சித் டி சொய்ஸா, வாசு­தேவ நாண­யக்­கார, பிரி­யங்­கர ஜயரத்ன, ஜனக்க பண்­டார தென்­னக்கோன் உள்­ளிட்ட பன்­னி­ரெண்டு உறுப்­பி­னர்கள் கையொப்­ப­மிட்டு கைய­ளித்­துள்ள குறித்த எழுத்­து­மூல ஆவ­ணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

கடந்த ஆட்­சிக்­கா­லத்தில் சர்­வ­தேச நாடுகள் மற்றும் நிறு­வ­னங்­க­ளி­ட­மி­ருந்து இர­க­சி­ய­மாக கடன் பெற்­றுக் ­கொண்­டுள்­ள­தாக மத்­தி­ய ­வங்­கியின் பிணை­மு­றி­ தொ­டர்­பாக விசா­ரணை நடத்தும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சாட்­சியம் அளித்­துள்ளார். இது தொடர்பில் அனைத்து ஊட­கங்­க ளும் செய்­தி­ வெளி­யிட்­டுள்­ளன.

அர­சி­ய­ல­மைப்பின் 148சரத்தின் பிர­காரம் அர­சாங்கம் என்ற வகையில் வெளி நா­டு­க­ளி­லி­ருந்து நிதி பெற்றுக் கொள்­ளப்­பட்­டி­ருந்தால் அது பாரா­ளு­மன்­றத்­திற்கு வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்க வேண்டும். அத்­துடன் மத்­திய வங்­கியின் கணக்­க­றிக்­ கை­களில் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருக்கவும் வேண் டும். 

ஆனால் பாரா­ளு­மன்ற கணக்­காய்வு அறிக்­கை­க­ளிலோ அல்­லது மத்­திய வங்கி அறிக்­கை­க­ளிலோ அவ்­வா­றான எந்­த­ வி­ட­யங்­களும் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை.  அதே­போன்று ஆசிய அபி­வி­ருத்தி வங்கி, உலக வங்கி, சர்­வ­தேச நாணய நிதி­யத்தின் அறிக்­கை­க­ளிலும் இந்த விட­யங்கள் சம்­பந்­த­மாக குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­க­வில்லை. 

அத­ன­டிப்­ப­டையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் கருத்து அடிப்­ப­டை­யற்ற, பொய்­யா­ன­தொன்­றாகும். அக்கருத்தினை கூட்டு எதிர்க்கட்சியினராகிய நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். ஆகவே இந்த விடயம் சம்பந்தமாக சம்பந்தப் பட்டவர்களிடம் உரிய விசாரணைகளை மேற்கொண்டு உண்மை நிலைவரம் எது வென்பதை பாராளுமன்றுக்கு அறிவிக் குமாறு கோருகின்றோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31