முஸ்லிம்களை மிலேச்சத்தனமாகக் கொன்று குவித்த ரட்கோவுக்கு ஆயுள் தண்டனை

Published By: Devika

22 Nov, 2017 | 10:25 PM
image

பொஸ்னிய யுத்தத்தின்போது இன அழிப்பு உள்ளிட்ட அடாவடித்தனங்கள் பலவற்றிலும் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் பொஸ்னியாவின் முன்னாள் இராணுவத் தளபதி ரட்கோ மிலாடிக்குக்கு (73) ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

‘பொஸ்னியாவின் கசாப்புக்காரர்’ என்று வர்ணிக்கப்படும் ரட்கோ, 1990களில் இடம்பெற்ற பொஸ்னிய யுத்தத்தின்போது இராணுவத் தளபதியாகப் பணியாற்றியவர். ரட்கோ தலைமையிலான இராணுவப் படையினர், பொஸ்னியாவின் முஸ்லிம் மக்களைக் குறிவைத்துக் கொன்று குவித்தது.

யுத்தத்தின் பின் 1995ஆம் ஆண்டு தலைமறைவான ரட்கோ, 2011ஆம் ஆண்டு தொலைதூர கிராமம் ஒன்றில் உள்ள தனது உறவினர் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

ரட்கோவின் யுத்தக் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் ஐ.நா.வின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் நடைபெற்று முடிந்து இன்று (22) தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ரட்கோவுக்கு ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பு வாசிக்கப்பட முன்னதாக, கடும் இரத்த அழுத்தத்தால் ரட்கோ பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறி நீதிமன்ற நடவடிக்கைகளை ஒத்திப்போடுமாறு ரட்கோ தரப்பு சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்தனர். எனினும் அந்தக் கோரிக்கை மறுக்கப்பட்டது.

இதையடுத்து, “நீதிமன்றில் நீங்கள் சொன்ன அனைத்துமே பொய்” என்று நீதிபதிகளை நோக்கிக் கூச்சலிட்டதால், ரட்கோ நீதிமன்றை விட்டு வெளியேற்றப்பட்ட பிறகே தீர்ப்பு வாசிக்கப்பட்டது.

அதில், பொஸ்னிய முஸ்லிம் ஆண்கள் மற்றும் சிறுவர்கள் ஏழாயிரம் பேரைக் கொன்றமைக்குத் தலைமை தாங்கியது, பொஸ்னிய முஸ்லிம் பெண்கள் மற்றும் சிறுமிகளைப் பெருமளவில் பாலியல் வன்கொடுமை செய்தமைக்கு உடந்தையாக இருந்தது, கைதிகளாகச் சிறைப்பிடிக்கப்பட்ட முஸ்லிம்களை பசி, தாகத்தில் வாட்டியது, அடித்து உதைத்தது, அப்பாவிப் பொதுமக்கள் மீது குண்டு மழை பொழிந்தது, முஸ்லிம்களை பலவந்தமாக வெளியேற்றியது, அவர்களின் வீடுகள் மற்றும் பள்ளிவாசல்களைத் தரைமட்டமாக்கியது உள்ளிட்ட குற்றங்களில் ரட்கோ குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டார்.

இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின் ஐரோப்பாவில் இடம்பெற்ற பெரும் இன அழிப்பாக பொஸ்னிய யுத்தம் கருதப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு...

2024-03-18 16:08:59
news-image

காஸா போர் நிறுத்தம்: கட்டார் பிரதமர்,...

2024-03-18 15:46:22
news-image

பாகிஸ்தானின் விமானத் தாக்குதல்களால் ஆப்கானில் 8...

2024-03-18 14:05:55
news-image

காசாவின் அல்ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல்...

2024-03-18 12:07:15
news-image

காஸாவின் மிகப் பெரிய வைத்தியசாலையில் இஸ்ரேலின்...

2024-03-18 11:38:08
news-image

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் 88...

2024-03-18 08:58:58
news-image

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஒருபாலின திருமணம்...

2024-03-17 13:02:52
news-image

இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணம் செய்யும்...

2024-03-17 12:40:47
news-image

கச்சத்தீவு விஷயத்தில் கருணாநிதி செய்தது துரோகம்:...

2024-03-17 11:40:06
news-image

நான் தோற்றால் இரத்தக்களறி - டிரம்ப்

2024-03-17 11:33:21
news-image

ஏழு கட்டங்களாக இந்திய மக்களவை தேர்தல்...

2024-03-16 16:18:24
news-image

திரை நட்சத்திரங்களுக்கு பாஜக வலை: தூத்துக்குடியில்...

2024-03-16 12:37:34