மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக கொழும்பு மறைமாவட்டத்தின் துணை ஆயராக கடமையாற்றிய கலாநிதி பீடலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளதாக திருத்தந்தை அறிவித்துள்ளதாக மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை தெரிவித்தார்.

மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் வைத்து இன்று புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் இந்த அறிவிப்பை மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை  வெளியிட்டார்.

மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்கு மக்கள் மத்தியில் குறித்த விசேட அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பில் மேலும்  மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் தெரிவிக்கையில்,

கொழும்பு மறைமாவட்டத்தின் முதலாவது துணை ஆயராக கடமையாற்றி வந்த ஆயர் மேதகு கலாநிதி பிடலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்ணான்டோவை மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயராக திருத்தந்தை நியமித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவித்தலை மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு ஆயர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை சார்பாக தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.

புதிய ஆயரின் பதவியேற்பு நிகழ்வுகள் தொடர்பில் பின்பு அறிவிக்கப்படும் என குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.