4 மாதங்களில் 40 மாணவர்களிடம்அதிக மதிப்பெண் தருவதாக கூறி ஆசிரியை செய்த ஷேஷ்ட்டை அம்பலம்

Published By: Digital Desk 7

22 Nov, 2017 | 04:17 PM
image

கொலம்பியா நாட்டின் 2வது பெரிய நகரமான மெடனிலுள்ள பாடசாலையில் ஆசிரியையாக வேலை செய்து வந்தவர் யொகாஸ்டா என்ற பெண், பாடசாலையில் படிக்கும் 16,17 வயது மாணவர்களுக்கு தனது கவர்ச்சி புகைப்படங்களை வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார்.

அந்த படங்களை பார்ப்பதோடு மட்டுமல்லாமல் தன்னுடன் உடலுறவில் ஈடுபட வேண்டும் என மாணவர்களை வற்புறுத்தி வந்துள்ளார்.

அதிக மதிப்பெண் வேண்டுமென்றால் தன்னுடன் உடலுறவில் ஈடுபட வேண்டும் என பல மாணவர்களை வற்புறுத்தியது நீண்ட நாட்களாக வெளியே தெரியாமலே இருந்துள்ளது.

மேலும் சிறப்பு வகுப்பு என்று கூறி மாணவர்களை தன் வீட்டுக்கு அழைத்து உடலுறவில் ஈடுபட்டதாக தற்போது குறித்த ஆசிரியை மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த 4 மாதங்களில் மட்டும் 40 மாணவர்களிடம் இது போன்ற செயல்களில் ஈடுபட்டுவந்துள்ளார்.

இந்நிலையில் ஒரு மாணவனின் தந்தை தனது மகனின் செல்போனில் ஆசிரியையின் ஆபாச படங்களை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதனையடுத்து உடனடியாக குறித்த மாணவனின் தந்தை பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்துள்ளார்.

பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டிற்கமைய குறித்த ஆசிரியை பொலிஸார் கைது செய்து  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது  குற்றம்  நிரூபிக்கபட்டதால்  ஆசிரியைக்கு 40 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

பள்ளி ஆசிரியை ஒருவர் மாணவர்களை மிரட்டி பாலியல் உறவில் ஈடுபட்ட சம்பவம் கொலம்பியா நாட்டு ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17