உலகில் முதன் முறையாக டிஜிட்டல் மாத்திரை ஒன்றினை பயன்படுத்துவதற்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த மாத்திரை நோயாளிகள் சரிவர மருந்து எடுப்பது குறித்த தகவல்களை அவர்களது மருத்துவருக்கு அனுப்பும் திறன் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மருந்து குறிப்பாக மன அழுத்தத்தால் உண்டாகும் நோய்களால் பாதிக்கப்படும் நோயாளிகளை  கருத்தில்  கொண்டு தயாரிக்கப்பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.