லிபியாவில் பிடிபடும் அகதிகள் மீது  வன்முறைகள் ஏவப்படுவதாகவும், பெண் அகதிகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் ஆபிரிக்க ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

ஆப்ரிக்க நாடுகளில் தீவிரவாத தாக்குதல், வறுமை போன்ற காரணங்களால் லட்சக்கணக்கான பொதுமக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாகச் செல்கின்றனர். இவர்களில் பலர் லிபியா வழியாகச் செல்லும் நிலை உள்ளது. 

இவர்களை சட்டவிரோதப் பயணம் மேற்கொள்ள அனுமதிக்காமல் லிபியாவில் உள்ள முகாம்களில் பராமரிக்கத் தேவையான நிதி உதவியை ஐரோப்பிய ஒன்றியம் அளித்துவருகிறது. இவ்வாறு சுமார் 43,000 அகதிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில் இந்த அகதிகள் மீது லிபிய அதிகாரிகள் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளதாகவும் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்துவதாகவும் ஆபிரிக்க ஒன்றியம் வேதனை தெரிவித்துள்ளது.