(ஆர்.யசி)

பிரபாகரனின் பாதையில் பயணித்து மீண்டும் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தவே வடக்கின் அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர். கலவரத்தின் மூலமாக தமிழர்களை அழிக்கும் முயற்சிகளை கைவிடவேண்டும் என ஜாதிக ஹெல உறுமைய கட்சியினர் தெரிவித்தனர். வடமாகாண கல்வி அமைச்சரின் செயற்பாட்டில் விக்கினேஸ்வரன் மௌனம் காக்கக்கூடாது எனவும் அக்கட்சியினர் குறிப்பிட்டனர். 

அண்மையில் வடக்கில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வடமாகாண கல்வி அமைச்சர் தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் செயற்பட்டதாக கூறி தென்னிலங்கை அரசியல் வாதிகள் மத்தியில் விமர்சிக்கப்பட்டுவரும் நிலையில் ஜாதிக ஹெல உறுமைய இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கட்சியின் பிரதித் தலைவர் பிரதியமைச்சர் கருணாசேன பரணவிதான இதனைக் கூறினார்.