இன்றைய அமைச்சரவை முடிவுகள்

Published By: Priyatharshan

22 Nov, 2017 | 12:47 PM
image

நேற்று 2017.11.21 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றபோது அறிவிக்கப்பட்ட அமைச்சரவை முடிவுகள் வருமாறு,

 01. இளைஞர்களுக்கு வாக்களிப்பதற்கு ஏதுவான வகையில் துணை வாக்காளர் இடாப்பினை தயாரிப்பதற்கான சட்டத்தினை தயாரித்தல் (விடய இல. 05) 

1980ம் ஆண்டு 44ம் இலக்க வாக்காளர்களை பதிவு செய்யும் சட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் ஜுன் மாதம் 01ம் திகதி 18 வயது பூர்த்தியாகின்ற அனைவருக்கும் வாக்காளர் இடாப்பில் பதிவு செய்து கொள்ள முடியும். அதற்காக வாக்காளர் இடாப்பு வருடாந்தம் மறுசீரமைக்கப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் குறித்த பணியினை மேற்கொள்வதற்கு எடுக்கும் காலப்பிரிவினுள் ஏதேனுமொரு தேர்தல் வரும் சந்தர்ப்பத்தில் கடந்த வருடத்தின் வாக்காளர் இடாப்பே பயன்படுத்தப்பட்டு வருவது வழமையாகும். இதனால் குறித்த வருடத்தில் 18 வயதினை அடைகின்ற இளைஞர்களுக்கு வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்காமல் போகின்றது. இதனைக் கருத்திற் கொண்டு ஒவ்வொரு வருடமும் துணை வாக்காளர் இடாப்பொன்றை தயாரிப்பதன் அவசியம் குறித்து தேர்தல் ஆணைக்குழு யோசனை ஒன்றை முன்வைத்துள்ளது. அதற்கு அவசியமான அம்சங்களை உள்ளடக்கி 1980ம் ஆண்டு 44ம் இலக்க வாக்காளர்களை பதிவு செய்யும் சட்டத்தினை திருத்தம் செய்வது தொடர்பில் சட்டமாதிபர் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்குவது தொடர்பில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


02. 'மஹாசுபவங்சய' ஆங்கிள மொழிக்கு பரிவர்த்தனை செய்தல் (விடய இல. 06)


இலங்கையின் உணவுக் கலாச்சாரம் மற்றும் அதன் வரலாற்று பரிணாமங்கள் தொடர்பில் விபரிக்கின்ற 'மஹாசுபவங்சய' எனும் பெயரில் பெறுமதியான கிரந்தம் ஒன்று, தேசமான்ய (கலாநிதி) டி.பப்லிஸ் சில்வா அவர்களின் மூலம் ஸ்ரீ ஜயவர்தனபுற பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் சிலரின் ஒத்துழைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.


இக்கிரந்தத்தினை ஆங்கிள மொழியில் மொழிபெயர்த்து, அதில் 1000 பிரதிகளை அச்சிடுவதற்கு தேவையான நிதியினை திரட்டிக் கொள்வதன் மூலம் அனுசரணை வழங்குவது தொடர்பில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

 

03. தேசிய கலை – கலாச்சார கொள்கையொன்றினை பலப்படுத்துதல் (விடய இல. 07)


புதிய கலை மற்றும் கலாச்சார கொள்கையொன்றை தயாரித்தல் மற்றும் அதனை செயற்படுத்தல் என்பவற்றின் மூலம் இலங்கையில் புதிய கலாச்சார மறுமலர்ச்சியினை ஏற்படுத்துவதற்காக விருது பெற்ற கலைஞர்கள் மற்றும் அறிஞர்களினால் ஆரம்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனடிப்படையில் உரிய நிர்வனங்களுடன் உரிய ஒருங்கிணைப்புடன் அதற்கு அவசியமான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வேண்டி, கலாச்சார மறுமலர்ச்சிக்கான தேசிய பிரிவொன்றை, ஜனாதிபதி செயலகத்துடன் இணைந்ததாக ஸ்தாபிப்பது தொடர்பில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


04. இலங்கை கடற்கரை பாதுகாப்பு திணைக்களத்துக்கு காவல் கப்பல் ஒன்றினை பெற்றுக் கொள்ளல் (விடய இல. 09)


இந்திய அரசாங்கத்திடன் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க இந்திய கடற்கரை பாதுகாப்பு திணைக்களத்தினால் பயன்படுத்தப்படுகின்ற 'வருண' காவல் கப்பலினை, இலங்கை கடற்கரை பாதுகாப்பு திணைக்களத்திற்கு எவ்வித அறவிடும் இன்றி பெற்றுக் கொடுக்க இணங்கியுள்ளது. அக்கப்பலினை நன்கொடையாக பெற்றுக் கொள்வது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


05. இலங்கையில் பைனஸ் காட்டுப்பயிரினை, தேசிய ஒளடத விசேடங்கள் அடங்கிய பயிராக பிரகடனப்படுத்துதல் (விடய இல. 10)


ஈரழிப்பு அதிகமாக காணப்படுகின்ற பிரதேசங்களில் மண்சரிவினை தடுப்பதற்காக பயிரிப்படுகின்ற பைனஸ் பயிர்செய்கையின் இடையே தேசிய ஒளடதங்களை பயிரிடும் வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதன் விளைவால், பெறப்படுகின்ற பலன்கள் மேலும் அதிகரிக்கின்றன. இவ்வேலைத்திட்டத்தினை வனாந்தர நிலையான முகாமைத்துவம் மற்றும் புனருத்தாபனம் தொடர்பான ஆசிய பசுபிக் வலயமைப்பின் மூலம் வழங்கப்படுகின்ற நன்கொடையின் கீழ் அடுத்து வருகின்ற 03 வருட காலத்தினுள் செயற்படுத்துவது தொடர்பில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


06. இலங்கை மற்றும் ஜமேக்கா ஆகிய நாடுகளுக்கு இடையில் மேற்கொள்ளப்படுகின்ற இருதரப்பு விமான சேவைகள் தொடர்பான ஒப்பந்தம் (விடய இல. 12)


அதிகாரிகள் மட்டத்தில் இணக்கத்துக்கு வந்துள்ள இலங்கை மற்றும் ஜமேக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான விமான சேவைகள் தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கும், பின்னர் அதனை செயற்படுத்துவதற்குமாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


07. இலங்கை மற்றும் ஹெலனின் குடியரசு (கிரேக்கம்) ஆகிய நாடுகளுக்கு இடையில் மேற்கொள்ளப்படுகின்ற இருதரப்பு விமான சேவைகள் தொடர்பான ஒப்பந்தம் (விடய இல. 14)


அதிகாரிகள் மட்டத்தில் இணக்கத்துக்கு வந்துள்ள இலங்கை மற்றும் ஹெலனின் குடியரசு (கிரேக்கம்) ஆகிய நாடுகளுக்கு இடையிலான விமான சேவைகள் தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கும், பின்னர் அதனை செயற்படுத்துவதற்குமாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 


08. உலக வியாபார அமைப்பின் வர்த்தக உதவிகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் (Trade Facilitation Agreement - TFA) இலங்கையின் இணைப்பு தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளல் (விடய இல. 23)


உலக வியாபார அமைப்பின் வர்த்தக உதவிகள் ஒப்பந்தத்தின் (Trade Facilitation Agreement - TFA) இலங்கை ஏற்கனவே கைச்சாத்திட்டுள்ளது. அவ்வாறு கைச்சாத்திட்டதன் விளைவினால் பல்வேறு பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இலங்கை இணங்கியுள்ளது. இதனால் போட்டித்தன்மைமிக்க சர்வதேச சந்தையில் இலங்கைக்கு சிறந்ததொரு இடம் கிடைகின்றது. அதனடிப்படையில் குறித்த பணியினை மேற்கொள்வதற்காக தேசிய குழுவொன்று தற்போது நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த ஒப்பந்தத்தில் அடங்கிய விடயங்களை மேற்கொள்வதற்கு மேலதிகமாக குறிக்க குழுவின் பணியினை வியாபிப்பதற்கும், குறித்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் செயற்படுவதற்கு உகந்த செயன்முறையொன்றை தயாரிப்பதற்கும் கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் கௌரவ ரிஷாட் பதியூதின் அவர்கள் மற்றும் அபிவிருத்தி உபாயமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் கௌரவ மலிக் சமரவிக்ரம ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


09. வேரஸ் கங்கை மழை நீர் கழிவு மற்றும் சூழலினை விருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் (விடய இல. 27)


கெஸ்பேவ, மஹரகம, தெஹிவளை, இரத்மலானை, மொரட்டுவை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் வெள்ளப்பெருக்கு அச்சுறுத்தலினை குறைக்கும் நோக்கில் வேரஸ் கங்கை மழை நீர் கழிவு மற்றும் சூழலினை விருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை செயற்படுத்துவதற்கும், அதற்கு அவசியமான நிதியினை திரட்டிக் கொள்வதற்கும் பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


10. மட்டக்களப்பு, மண்முனை தென் பிரதேசத்தில் நீர்வாழ் உயிரினங்களை விருத்தி செய்தல் (விடய இல. 29)


யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இறால் வளர்ப்புக்கு பெயர்ப்போன மட்டக்களப்பு, மண்முனை தென் பிரதேசத்தில் மீண்டும் நீர்வாழ் உயிரினங்களை விருத்தி செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இதன் மூலம் தேசிய பொருளாதாரத்திற்கு உயரிய பங்களிப்பினை வழங்குவதற்கும், பிரதேசத்தில் நேரடி வேலைவாய்ப்புகள் 900 இனை புதிதாக உருவாக்குவதற்கும் வாய்ப்பு கிடைக்கின்றது.


அதனடிப்படையில், அப்பிரதேசத்தினுள் 450 அளவில் குட்டைகளை அமைத்து வர்த்தக ரீதியில் வருமானம் ஈட்டித்தருகின்ற மீனினங்களை உருவாக்குவதற்காக வேண்டி அரசாங்கத்தின் கொள்முதல் செயன்முறையின் கீழ் தெரிவு செய்யப்படுகின்ற முதலீட்டாளர்களுக்கு இலங்கை முதலீட்டு சபையின் ஊடாக குத்தகையின் அடிப்படையில் இவ்விடங்களை ஒதுக்கி கொடுப்பது தொடர்பில் மீன்பிடி மற்றும் நீர்வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


11. 1941ம் ஆண்டு 39ம் இலக்க சலுகை கடன் கட்டளைகள் சட்டத்தினை திருத்தம் செய்தல் (விடய இல. 34)


கொழும்புக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ள சலுகை கடன் சபையினை ஏனைய பிரதேசங்களுக்கும் வியாபிப்பதற்காக வேண்டி அதன் நீதிமன்ற எல்லையினை விரிவுபடுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. மேலும் அதன் பலனாளிகளை அதிகரிப்பதற்காக மற்றும் தெரிவு செய்யப்படுகின்ற நிர்ணயங்களை மாற்றுவதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கு தேவையான உறுப்புரைகளை உள்ளடக்கி 1941ம் ஆண்டு 39ம் இலக்க சலுகை கடன் கட்டளைகள் சட்டத்தினை திருத்தம் செய்வது தொடர்பில் நீதி அமைச்சர் கௌரவ தலதா அதுகோரல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


12. ரஜகம நகர வீடமைப்பு வேலைத்திட்டம் (விடய இல. 36)


137 குடும்பங்களுக்கு வீட்டு வசதிகளை பெற்றுக் கொடுக்கும் ரஜகம நகர வீடமைப்பு வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்கும், இக்கிராமத்துக்கான அடிப்படை வசதியொன்றாக பிரஜைகள் மண்டபம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கும் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


13. அரச காணிகளை வெளியேற்றுவதை முறைப்படுத்தல் மற்றும் அரச காணிகளை சட்ட விரோதமாக பிடித்துக் கொள்வதை தடுத்தல் (விடய இல. 38)


அரச காணிகளை வெளியேற்றுவதை முறைப்படுத்தல் மற்றும் அரச காணிகளை சட்ட விரோதமாக பிடித்துக் கொள்வதை தடுப்பது தொடர்பில் சிபார்சுகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் சிபார்சுகளையும், ஜனாதிபதி அவர்கள், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் ஆகியோரும் முன்வைத்த அம்சங்களை கவனத்திற் கொண்டு அரச காணிகளை வெளியேற்றுவதை முறைப்படுத்தல் மற்றும் அரச காணிகளை சட்ட விரோதமாக பிடித்துக் கொள்வதை தடுப்பது ஆகியவற்றை மேலும் பலப்படுத்துவது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


14. தேசிய காணி பயன்பாட்டு கொள்கையினை செயற்படுத்துவதற்கான சட்ட வரைபொன்றை தயாரித்தல் (விடய இல. 40)


தேசிய காணி பயன்பாட்டு கொள்கையினை அடிப்படையாகக் கொண்டு அதனை செயற்படுத்துவதற்கு உகந்த முறையில் தேவையான சட்ட மூலம் ஒன்றை தயாரிப்பதற்காக வேண்டி சட்டமாதிபர் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்குவதற்கு காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


15. ஏற்றுமதி பயிர்செய்கை கிராம வேலைத்திட்டம் (விடய இல. 46)


கண்டி நகர அபிவிருத்தி தொடர்பான அமைச்சரவை குழுவின் மூலம் இனங்காணப்பட்ட ஏற்றுமதி பயிர்செய்கை கிராம வேலைத்திட்டத்தினை மெததும்பர பிரதேச செயலகப் பிரிவில் உள்ள வூட்சயிட் தோட்டத்தில், இவ்வேலைத்திட்டத்துக்காக உகந்த பிரதேசம் என கருதப்பட்டுள்ள 400 ஏக்கர் பூமிப்பகுதியில் முன்னெடுப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. உரிய நிர்ணயங்களை பின்பற்றி தெரிவு செய்யப்படுகின்ற பலனாளிகளுக்கு குத்தகையின் அடிப்படையில் அந்நிலப்பகுதியினை பெற்றுக் கொடுப்பதற்கும், அப்பிரதேசத்தில் விவசாயத்தில் ஈடுபடுவதற்காக தொழில்நுட்ப ஒத்துழைப்பினை பெற்றுக் கொடுப்பதற்கும், இதன் வெற்றியின் அடிப்படையில் இவ்வேலைத்திட்டத்தினை விரிவுபடுத்துவதற்கும் விசேட வேலைத்திட்டங்கள் அமைச்சர் மற்றும் கண்டி அபிவிருத்தி தொடர்பான அமைச்சரவை குழுவின் தலைவர் கலாநிதி சரத் அமுணுகம அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


16. இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்துகளுக்காக வேண்டி டயர்களை மீள நிரப்புதல் மற்றும் முன் பொருத்துவதற்கான ஒப்பந்தத்தினை வழங்குதல் (விடய இல. 47)


இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்துகளுக்காக வேண்டி டயர்களை மீள நிரப்புதல் மற்றும் முன் பொருத்துவதற்கான சேவை வழங்கும் ஒப்பந்தத்தினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் மற்றும் கொள்முதல் மேன்முறையீட்டு சபையின் சிபார்சின் பெயரிலும் 09 கம்பனிகளுக்கு வழங்குவது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


17. பழைய கோட்டை வீதியினை (இராஜகிரிய பகுதி) மறுசீரமைத்தல் (விடய இல. 48)


பழைய கோட்டை வீதியினை (இராஜகிரிய பகுதி) மறுசீரமைப்பு செய்வது தொடர்பான பணியினை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மூலம் நேரடியாக தொழிலாளர்களின் முயற்சியினை பயன்படுத்தி மேற்கொள்வது தொடர்பில் உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் கௌரவ லக்ஷ;மன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


18. வைத்தியசாலைகளில் கட்டுமானங்கள் மற்றும் அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துதல் (விடய இல. 49)


சாதாரண கொள்முதல் முறையினை பின்பற்றும் போது ஏற்படுகின்ற கால தாமதத்தினால் வைத்தியசாலைகளின் கட்டுமானங்கள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதில் எழுந்துள்ள கால தாமதத்தினை கவனத்திற் கொண்டு, அந்நிலைமையில் இருந்து மீள்வதற்காக அப்பணியினை அரச நிர்மாண நிறுவனமொன்றுக்கு ஒப்படைப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு இணங்க, கராபிட்டிய, அம்பாரை, நிந்தவூர் ஆகிய வைத்தியசாலைகளில் துரித கதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய கட்டுமானப்பணிகளை பொறியியல் பணிகள் தொடர்பான மத்திய ஆலோசனை பணியகம் மற்றும் பொறியியல் சேவை தனியார் நிறுவனம் ஆகியவற்றுக்கு வழங்குவதற்கும், ஹொரண அடிப்படை வைத்தியசாலையின் கட்டுமான பணிகளை இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்துக்கு வழங்குவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


19. திரிபோஷ உற்பத்திக்கு அவசியமான பால்மாவினை கொள்வனவு செய்தல் (விடய இல. 50)


திரிபோஷ உற்பத்திக்கு அவசியமான பால்மாவினை 2014ம் ஆண்டிலிருந்து 2017ம் ஆண்டு வரை மில்கோ (தனியார்) கம்பனி வழங்கி வந்தது. அதேபோன்று 2018ம் ஆண்டுக்காக 600 மெட்ரிக் தொன் பால்மாவினை எவ்வித இடை தரகர்களும் இன்றி நேரடியாக, வரியின்றிய 486 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் அதே கம்பனியிடம் இருந்து கொள்வனவு செய்வது தொடர்பில் சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

20. பொரல்லை, எலியட் பிரதேசம் மத்திய தரவர்க்கத்தினருக்கான வீடமைப்பு வேலைத்திட்டம் (விடய இல. 52)


பொரல்லை, எலியட் பிரதேசம் மத்திய தரவர்க்கத்தினருக்கான 400 அலகுகளைக் கொண்ட வீடமைப்பு வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் 7,799 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் M/s Yanjian Group Company Limited நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பில் பாரிய நகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


21. 'சிலோன் டி' உற்பத்திகளுக்காக பூகோள விருத்தி மற்றும் விற்பனை நிகழ்ச்சிகளை செயற்படுத்தல் (விடய இல. 50)


இலங்கை தேயிலை உற்பத்தியினை 'சிலோன் டி' எனும் பெயரில் பூகோளமயப்படுத்தும் வேலைத்திட்டத்தின் ஊடக பயன்பாடு, பட்டியற்படுத்தல் மற்றும் கொள்முதல் செய்தல் தொடர்பில் ஆலோசனை நிறுவனம் ஒன்றை தெரிவு செய்வதற்காக அரச கொள்முதல் செயன்முறையின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள ஆலோசனை கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் உரிய ஆலோசனை நிறுவனமாக 219.89 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் Dentsu Grant (Pvt) Ltd.  நிறுவனத்தினை 03 வருட காலத்துக்கு நியமிப்பது தொடர்பில் பெருந்தோட் கைத்தொழில் துறை அமைச்சர் கௌரவ நவின் திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


22. பின்தங்கிய பாடசாலை மாணவர்களுக்காக காலனிகளை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தினை பலப்படுத்துதல் (விடய இல. 56)


பின்தங்கிய பாடசாலை மாணவர்களுக்காக காலனிகளை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தினை பலப்படுத்தும் நோக்கில் அவ்வவ் தரத்தின் அடிப்படையில் பாடசாலை மாணவர்களுக்காக 1,200 ரூபா முதல் 1,500 ரூபா வரையான பெறுமதியான காலனிகளை பெற்றுக் கொள்ளும் அட்டைகளை இவ்வருடத்தில் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக 808.27 மில்லியன் ரூபா மதிப்பீட்டு தொகையினை ஏற்றுக் கொள்வதற்கும் கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


23. இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் அச்சகத்தினை நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் விருத்தி செய்தல் (விடய இல. 57)


டிஜிட்டல் தொழில்நுட்பத்தினை அறிமுகப்படுத்தி இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் அச்சகத்தினை நவீனமயப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் 2.9 அமெரிக்க டொலர் மில்லியன்களுக்கும் 15 மில்லியன் வரியற்ற ரூபா மதிப்பீட்டு தொகைக்கும் M/s Metropolitan Office (Pvt) Ltd. நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பில் கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

24. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் எரிபொருள் வழங்கும் பிரிவினை (Fuel Hydrant System) ஸ்தாபித்தல் மற்றும் விமான சேவைகள் எரிபொருள் நிரப்பும் வசதிகளை விருத்தி செய்தல் (விடய இல. 58)


பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் எரிபொருள் வழங்கும் பிரிவினை (Fuel Hydrant System) ஸ்தாபித்தல் மற்றும் விமான சேவைகள் எரிபொருள் நிரப்பும் வசதிகளை விருத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தினை 51.5 அமெரிக்க டொலர் மில்லியன் வரியற்ற தொகைக்கு M/s WEC Engineers and Contractors (Pvt) Ltd., Singapore, PT Wijaya Karya (Persero) Tbk மற்றும் China National Chemical Engineering ஆகிய நிறுவனங்களின் இணை வியாபாரத்துக்கு வழங்குவதற்கும், அதற்கு தேவையான நிதி வசதிகளை திரட்டிக் கொள்வது தொடர்பிலும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ அர்ஜுண ரணதுங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


25. எரிபொருள் களஞ்சியசாலை தாங்கியொன்றினை கொலன்னாவ களஞ்சிசாலை பகுதியில் ஸ்தாபித்தல் (விடய இல. 59)


15,000 கன மீட்டர் கொள்ளளவினைக் கொண்ட Internal Floating Roof  இனைக் கொண்ட எரிபொருள் களஞ்சியசாலை தாங்கியொன்றினை கொலன்னாவ களஞ்சியசாலை பகுதியில் ஸ்தாபிப்பதற்கான ஒப்பந்தத்தினை 412.78 மில்லியன் வரியற்ற தொகைக்கு M/s Indo East Engineering and Contraction (Lanka) Pvt Ltd நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பில் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ அர்ஜுண ரணதுங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


26. ஐக்கிய நாடுகளின் சமாதான இராணுவத்தின் பணிகளுக்கு பயன்படுத்துவதற்காக வேண்டி முன்மொழியப்பட்டுள்ள விசேட படையணிக்கு அவசியமான 06 வாகனங்களை கொள்வனவு செய்தல் (விடய இல. 60)


ஐக்கிய நாடுகளின் சமாதான இராணுவத்தின் பணிகளுக்கு பயன்படுத்துவதற்காக வேண்டி முன்மொழியப்பட்டுள்ள விசேட படையணிக்கு அவசியமான 06 வாகனங்களை, ஒரு வாகனம் 68.93 மில்லியன் ரூபா வீதம் கொள்வனவு செய்வதற்காக 413.59 மில்லியன் வரியற்ற தொகைக்கு M/s Securates Lanka (Pvt) Ltd நிறுவனத்திடம் இருந்து கொள்வனவு செய்வது தொடர்பில் சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சாகல ரத்னாயக அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


27. பொலன்னறுவை மாவட்ட வைத்தியசாலையில் அவசர விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் இரண்டாம் கட்ட நிர்மாணப்பணிகள் (விடய இல. 62)


பொலன்னறுவை மாவட்ட வைத்தியசாலையில் அவசர விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் இரண்டாம் கட்ட நிர்மாணப்பணிகளை னுநளபைn யனெ டீரடைவ முறையின் அடிப்படையில் 643.36 மில்லியன் வரியுடன கூடிய தொகைக்கு பொறியியல் பணிகள் தொடர்பான மத்திய ஆலோசனை பணியகம் மற்றும் பொறியியல் சேவை தனியார் நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பில் சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

28. 1969ம் ஆண்டு 01ம் இலக்க ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (கட்டுபாட்டு) சட்டத்தின் கீழ் ஏற்றுமதி கட்டுப்பாடு விதிக்கப்பட்ட மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களின் பட்டியலுக்காகவும், இறக்குமதி கட்டுப்பாடு விதிக்கப்பட்ட மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களின் பட்டியலுக்காகவும் தயாரிக்கப்பட்ட சட்டதிட்டங்கள் (விடய இல. 65 மற்றும் 66)


1969ம் ஆண்டு 01ம் இலக்க ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (கட்டுபாட்டு) சட்டத்தின் கீழ் ஏற்றுமதி கட்டுப்பாடு விதிக்கப்பட்ட மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களின் பட்டியலுக்காகவும், இறக்குமதி கட்டுப்பாடு விதிக்கப்பட்ட மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களின் பட்டியலுக்காகவும் தயாரிக்கப்பட்ட சட்டதிட்டங்கள் அடங்கிய 2017-11-09ம் திகதி 2044ஃ40ம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மற்றும் 2017-11-09ம் திகதி 2044ஃ41ம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஆகியவற்றை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தினை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி சமர்ப்பிப்பது தொடர்பில் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் கௌரவ மலிக் சமரவிக்ரம அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


29. முதலீட்டு விருத்தி தொடர்பில் இலங்கை மற்றும் கொரியா குடியரசுக்கும் இடையில் மேற்கொள்ளப்படவுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் (விடய இல. 67)


முதலீட்டு விருத்தி தொடர்பில் இலங்கை மற்றும் கொரியா குடியரசுக்கும் இடையில் மேற்கொள்ளப்படவுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் கௌரவ மலிக் சமரவிக்ரம அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


30. தொற்றா நோய்கள் தொடர்பில் சார்க் நாடுகளின் முதலாவது மாநாட்டினை இலங்கையில் நடாத்துதல் (விடய இல. 68) 
தொற்றா நோய்கள் தொடர்பில் சார்க் நாடுகளின் முதலாவது மாநாட்டினை 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் 09 மற்றும் 10ம் திகதிகளில் கொழும்பில் நடாத்துவது தொடர்பில் சுகாதாரம், போசணை மற்றம் சுதேச மருத்துவ அமைச்சர் கௌரவ டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


31. கலாச்சாரம், கலை, கல்வி, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் ஒத்துழைப்புகள் தொடர்பில் இலங்கை மற்றும் கொரியா குடியரசு ஆகிய நாடுகளுக்கு இடையில் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடல் (விடய இல. 69)


கலாச்சாரம், கலை, கல்வி, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் ஒத்துழைப்புகள் தொடர்பில் இலங்கை மற்றும் கொரியா குடியரசு ஆகிய நாடுகளுக்கு இடையில் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் கௌரவ திலக் மாரப்பன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


32. 2017/2018 பெரும்போகத்திற்காக வேண்டி உரம் வழங்குதல் (விடய இல. 71)


2017/2018 பெரும்போகத்திற்காக வேண்டி அரசாங்கத்திடம் உள்ள உரத்தினை பகிர்ந்தளிப்பதற்கு அவிசயமான 72,000 மெட்ரிக் தொன் யூரியாவினை கொள்வனவு செய்வதற்கான டென்டரினை JAT Holding (Pvt) Ltd.. நிறுவனத்துக்கு ஒரு மெட்ரிக் தொன் 327.40 அமெரிக்க டொலர் வீதம் 23.57 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வழங்குவது தொடர்பில் கமத்தொழில் அமைச்சர் கௌரவ துமிந்த திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48