நவீன தொழில்­நுட்பத் துறையில் சாத­னைகள் படைத்து டிஜிட்டல் முறையில் முன்­னேற்­றங்­களை கண்டு புதிய உலகை வெற்றி கொள்வோம் எனத் தெரி­வித்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, அறி­வுசார் பொரு­ளா­தார வள­ர்ச்­சியே அர­சாங்­கத்தின் கொள்­கை­யாகும் என்றும் குறிப்­பிட்டார்.

ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறு­வ­னத்­தினால் கட­லுக்­க­டி­யான கேபில்கள் மூலம் விரை­வான இணை­யத்­தள சேவை­களை வழங்கும் நிகழ்வும் ரெலிகொம் நிறு­வனத்தின் 150 ஆண்டு விழாவும் கோட்­டை­யி­லுள்ள ஜனா­தி­பதி மாளி­கையில் இடம்­பெற்­றது. இந் நிகழ்வில் பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

ஜனா­தி­பதி அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், உலக தொழில்­நுட்பத் துறை வேக­மாக முன்­னோக்கிக் கொண்­டி­ருக்­கின்­றது. எனவே நாட்டு மக்கள் அந்த முன்­னேற்றத்­துக்குள் உள்­ளீர்க்கும் நட­வ­டிக்­கை­களை அரசு தனது கொள்கைத் திட்­ட­மாக முன்­னெ­டுக்­கின்­றது. இன்று வாழும் மக்­க­ளுக்கும் நாளை பிறக்­கப்­போகும் பிள்­ளை­க­ளுக்கும் எதிர்­கா­லத்தில் நவீன தொழில்­நுட்­பங்­களை வழங்க அரசு பல திட்­டங்­களை தயா­ரித்­துள்­ளது.

மனிதன் தினமும் புதிய தொழில்­நு­ட­பத்தைக் கண்­டி­பி­டிக்­கின்றான். ஒவ்­வொரு நாளும் மாறிக் கொண்­டி­ருக்கும் நவீன தொழில்­நுட்பத் துறை­யோடு எமது மக்­களும் இணைய வேண்டும்.

எமது மக்­களின் கல்வி, சுகா­தாரம் உட்­பட அடிப்­படை வச­திகள், பொரு­ளா­தார அபி­வி­ருத்­திகள் அனைத்தும் அறி­வுசார் ரீதி­யா­கவே முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது. உலகின் அனைத்து நக­ரங்­களின் முன்­னேற்­றத்­துடன் எமது நக­ரங்­களும், கிரா­மங்­களும் முன்­னேற்­றப்­படும்.

இன்று பிள்­ளைகள் பிறக்­கும்­போதே நவீன தொழில்­நுட்­பத்­து­ட­னேயே பிறக்­கின்­றனர் என்­றுதான் கூற வேண்டும். அந்­த­ள­விற்கு தகவல் தொழில்­நுட்­பத்­துறை வள­ரச்சி கண்­டுள்­ளது.

உலகின் அபி­வி­ருத்­தி­களில் இலங்­கை­யர்கள் தமது பங்­க­ளிப்பை வழங்கும் நிலை­மையை ஏற்­ப­டுத்த வேண்டும். உலகின் வளர்ச்­சி­ய­டைந்த நாடு­க­ளுக்கு இணை­யாக எமது நாட்டின் தகவல் தொ

ழில்­நுட்­பத்­து­றையை முன்­னேற்­று வதேஅரசின் கொள்­கை­யாகும். அரசின் புதிய கொள்­கை­களை நிறை­வேற்றவும், தகவல் தொழில்­நுட்பத் துறையில் வளர்ச்­சியை முதன்­மைப்­ப­டுத்­தியே டிஜிட்டல் அமைச்சு ஏற்­ப­டுத்தப்­பட்­டது.

அத்­துடன் எமது சம்­பி­ர­தாய அர­சியல் கருத்து முரண்­பா­டுகள், தேர்தல் மோதல்கள் அனைத்தும் புதிய தொழில்­நுட்ப வளர்ச்­சி­யுடன் மாற்­ற­ம­டைய வேண்டும் என்றும் ஜனா­தி­பதி தெரி­வித்தார்.