இரண்டு கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் நபரொருவரை சிலாபம் பகுதியில் வைத்து கைதுசெய்துள்ளதாக மதுவரித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் பெறுமதி சுமார் 2 கோடி ரூபாவென அதிகாரிகள் தெரிவித்தனர்.

மதுவரித் திணைக்கள அதிகாரிகளால் சிலாபம் பகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டநபர் சிலாபம் கொலனிவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவரெனவும் குறித்த ஹெரோயின் போதைப்பொருள் கடல்மார்க்கமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கலாமெனவும் சந்தேகிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.