2016இல் 39000 விபத்துகள் 3017 பேர் உயிரிழப்பு.!

Published By: Robert

22 Nov, 2017 | 10:32 AM
image

கடந்த வரு­டத்தில் 39 ஆயி­ரத்து 199 வீதி விபத்­துகள் இடம் பெற்­றுள்­ளன. இந்த விபத்­துக்­க­ளினால் 3017 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். அத்­துடன் 2015 ஆம் ஆண்­டுடன் ஒப்­பி­டு­கையில் கடந்த வரு­டத்தில் விபத்­து­களின் எண்­ணிக்­கையும் உயி­ரி­ழப்­பு­களும் அதி­க­ரித்­துள்­ள­தாக ஆளும் கட்சி பிர­தம கொற­டாவும் அமைச்­ச­ரு­மான கயந்த கரு­ணா­தி­லக சபையில் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்­க்கி­ழமை வாய்­மூல விடைக்­கான வினா நேரத்தின் போது கூட்டு எதிர்க்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் உதய கம்­மன்­பில எழுப்­பிய கேள்­விக்கு சட்டம் ஒழுங்கு அமைச்­ச­ருக்கு பதி­லாக பதி­ல­ளிக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இதன்­போது உதய கம்­மன்­பில எம்.பி கேள்வி எழுப்பும் போது,

2016 ஆம் ஆண்டு வாகன விபத்­து­களின் எண்­ணிக்­கையும் குறித்த விபத்­து­க­ளினால் உயி­ரி­ழந்­த­வர்கள் எண்­ணிக்கை யாது? 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டு ஒப்­பி­டு­கையில் அதி­க­ரித்த எண்­ணிக்கை யாது? என்றார்.

இந்த கேள்­விக்கு அமைச்சர் பதி­ல­ளிக்கும் போது, கடந்த வரு­டத்தில் 39 ஆயி­ரத்து 199 வீதி விபத்­துகள் இடம் பெற்­றுள்­ளன. இந்த விபத்­துக்­க­ளினால் 3017 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். இதன்­படி 2014 ஆம் ஆண்டு 35 ஆயி­ரத்து 966 விபத்­து­களும் 2015 இல் 38 ஆயி­ரத்து 107 விபத்­து­களும் இடம்­பெற்­றுள்­ளன. இதன்­பி­ர­காரம் 2014 மற்றும் 2015 ஆம் ஆண்­டு­க­ளுடன் கடந்த ஆண்­டுக்­கான வீதி விபத்­து­களை ஒப்­பிடும் போது முறையே 3233 ஆகவும் 1092 ஆகவும் அதி­க­ரித்­துள்­ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31